Pages

Thursday, May 29, 2014

நீங்களும் கவிதை எழுதலாமே...!


  வணக்கம் நண்பர்களே !
        எனக்கு ஒருமுறை கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது . சரி சும்மா இருப்பதற்கு பதிலாக மாணவர்களை எதாவது செய்ய சொல்ல்லாமே என்று யோசித்தேன். கவிதை எழுதுவீர்களா? என்று கேட்டேன் கவிதை வராது வேறெதாவது கேழுங்கள் என்றனர் அம் மாணவர்கள். முடியாது கவிதை வரும் என்று சொல்லி ஹைக்கூ கவிதை எழுதுங்கள் என்றேன். கவிதையே வராது என்று சொன்ன அம்மாணவர்கள் எழுதிய கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
இரண்டாம் ஆண்டு பயிலும் BSC.,biotecnology மாணாக்கர்களின் 

கவிதைகள்...... 

தோழி.
 

 பள்ளி என்ற ஒன்றில்தான்
 நம் நட்பு என்ற பூ மலர்ந்தது!
 கல்லூரி என்ற ஒன்றில்தான்
 மலர்ந்த பூ மணம் வீசியது..!
                         -வீ.கோமதி

தோழி.
 


 மற்றவர்களிடம் ஆயிரம் முறை
 பழகி பிரிந்திருந்தாலும் கூட!
 உன்னிடம் ஒருமுறை பழகி பிரிவதற்கு
 கண்ணீர்த்துளிகள் மட்டும் மிச்சம்...!!!!


மழை.. வானத்தில்
 மழை இல்லை போலும்
 மக்களின் பஞ்சம்
 தீர்க்க!
   தன்னை வஞ்சம்
 செய்து கொள்கிறாள்
 அருவி....!!
           -ச.அரவிந்த்

அன்பு..
 

 பசியால் அழுத குழந்தை
  திடீரென சிரித்தது
 தாயின் அன்பினால்...!


தொலைவு..
 

 ஏணிப்படி வைத்தும்
  எட்டவில்லை
 நம் இருவர் நட்பின்
         எல்லை!!!
                   -எஸ்.கார்த்திக்கடற்கரை..
 

 வட்டநிலவின் வளைவை காண!
 ஆயிரம் காதலர்கள்.
 கடற்கரை முழுநிலவில்
 முத்தக்காட்சி!
 காதலிக்க மனமின்றி
 கண்ணீர் வடித்தது
 கருமேகம் மட்டும்!
 கடலலையின் காதல் கண்டு...
                  -----  செ. பிரபாகரன்


நண்பன்.. 

 நீயும்! நானும்!
 கல்லூரி எனும் சாலையில் சந்தித்தோம்
 நண்பன் எனும் மரம் நமக்கு நிழலாக இருந்தது.
                                 -சதீஸ்

நண்பன..
 

 மழையைப் போல நண்பன்
  மழை இல்லையெனில்!
 மனிதன் இல்லை..பசியில் குழந்தை..
 

 குழந்தை அழுகிறது
 தகப்பன் கஞ்சி காய்ச்சுகிறான்
 சாப்பிடுவதற்கு அல்ல!
 சுவரில் ஒட்ட...!!!
              -மூர்த்தி


உயிர்த்துளிகள்
  வானில் இருந்து மழைத்துளிகள்
 வரவில்லையென்றால்!
 மனிதன் வாழ
 மண்ணில் இருந்து உயிர்த்துளிகள்
 வராது!!
              - இரா.விஸ்வநாதன்


காதலும், நட்பும்..

 


 நட்பு என்பது சூரியன் போல!
 காதல் என்பது சந்திரன் போல!
 இரண்டும் இல்லையெனில்
 இரவும்,பகலும் இல்லை-அதுபோல
 நட்பும்,காதலும் இல்லையெனில்
 வாழ்க்கை என்பதில்லை...!
                - எஸ்.நந்தகுமார்


ஒரு நொடியினிலே...
 

 கடவுள் தந்த பூமி
  கடலில் கரைஞ்சி போச்சி!
 நேசம் தந்த உயிறு
  நெஞ்ச செதச்சி போச்சி!
 செதஞ்சி போன நெஞ்சி
  செத்து போனதடி-மறுபடியும்
 உன்ன பாக்கையிலே மாலையோட!
  மழைமேகம் காத்திருக்க!
 மறுமேகம் தடுக்குதடி-அதுபோல
  என் அருகே நீ இருக்க!
 என்னுள்ளம் விடியுதடி-உன்
  மலழைப் பேச்சினிலே மயங்கி
 மனமோ மறுகுதடி-அந்த
  ஒரு நொடியினிலே...!!!!
              - ந.ரவிக்குமார்


மகிழ்ச்சி..
 

 
 வேரின்றி இருந்தாலும்
  கூடையிலிருந்த பூக்கள்
 மலர்ச்சியோடு இருந்தன
  மழைக்காலங்களில்!!!


 வறுமை..
  கோயிலில் அம்மனுக்கு
   பட்டுப்புடவை
  ஏக்கத்துடன் பார்த்தால்
   ஏழைப்பெண்!!
               --- எம்.ராமச்சந்திரன்


முத்தம்..

 முத்தம் தவறில்லை
 தவறென்று தர்க்கம் செய்யாதே!
 வேரெதுவாலும்
 அன்பின் ஆழத்தை அவ்வளவு அழுத்தமாய்
 சொல்லமுடியாது...!
           ----- சே.மோகன்


காதல், நட்பு
 நட்பு என்பது வழி!
 காதல் என்பது விழி!
 வழி இல்லையென்றால் விழி இருந்து என்ன பயன்?
 விழி இல்லையென்றால் வழி இருந்து என்ன பயன்?
 நட்பு எனும் வழி !
 வாழ்க்கையை அடைவதற்கு.
 காதல் எனும் விழி !
 வழியில் பயணம்
 செய்வதற்கு...


 காதல்
 


  பொய் சொல்லி விட்டேன் அன்பே!
  நீ அழகென்று!
  நீயே அழகிற்கெல்லாம்
  அழகென்று தெரியாமல்!
  கண்மொழி
  நீ விழிகளால் பேசிய மொழிகளைக் கேட்டு
  விவரம் அறியா!
  குழந்தை ஆனேன்
  அந்நேரம்..


அழகு 
 

 ஆகாயத்தில்
 அழகற்ற நிலவு! அங்கே
 உன் முகத்தை வைத்தேன்.
 முகம் சுழித்துக் கொண்டது நிலவு
 என்னவள் எத்தனை அழகு!
                   -தமிழரசன்Friday, February 21, 2014

திருவள்ளுவரின் பார்வையில் காதலியின் கண்கள் ...

காதலில் மிகுந்த சுவை தரக்கூடியது  காதலியின் கண்கள் என்கிறார் வள்ளுவர் ..


         திருவள்ளுவர் காலத்தில் பெண்களும் 'சைட்' அடித்தார்கள் என்பதற்கு இக் குறள் சான்று ..

                        "கண்களவு  கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் 
                        செம்பாக மன்று பெரிது "     -குறள் 1091

காதலியை சந்திப்பது , அவளுக்காக காத்திருப்பது , அவளோடு பைக்கில் 
 ஊர்சுற்றுவது , அவளுக்கு பரிசு வாங்கித்தருவது , ஓடாத படத்துக்கு ஓரடிக்கட் போடுவது , ஒரே இளநியில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது , இப்படியெல்லாம் பல வகை இருந்தாலும் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சைட் அடிக்கும் காதலியின் கண்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார்..

                     கண்களவு          =திருட்டுத்தனமாய் கண்ணால்
                    கொள்ளுஞ்         = பார்த்துக் கொள்ளும்
                    சிறு நோக்கங்    = சிறிய நோக்கம்
                    காமத்திற்             = காதலில்
                    செம்பாக மன்று = சரி பாதி
                    பெரிது                    =அதை விட பெரிது

காதலியானவள் திருட்டுத்தனமா லுக்கு விடுவது இருக்கு பாருங்க அதில் தான் காதலனுக்கு பெரிய சந்தோசம் .

"மச்சி பாரே அவ என்னை பாக்குறா என்பான் காதலன் "

கண்களவு கொள்ளுஞ் சிறு நோக்கங்  - கண்ணால் களவு கொள்ளுவார்களாம்

எதை என்றால் ?  காதலனின் மனதை ..

இந்த சிறு பார்வையே போதும் ஆண்கள் விழுந்து விடுவார்கள் ,இந்த பார்வையிலேயே இவ்வளவு களவாணித்தனம் இருக்குது என்றால் பெரு நோக்காய் இருந்தால் காதலன் கதி அதோ கதி தான்..

பெண்ணை விட இந்த உலகில் பெருமையானது எதுவுமில்லை என்பது வள்ளுவப்பெருமானின் கருத்து . 


                                                                                         நன்றி
  

                       
                                                            

Tuesday, February 4, 2014

சிரிக்க சிந்திக்க ....1.பிளான் பண்ணாம எதையும் செய்யகூடாது ஓகே .                           2.  சைக்கிள் போட்டிக்கு எடுத்துப்போங்க..


  3.இதுவல்லவா அன்பு ...


                                                       4. என்ன ஒரு சேவை ..

                                               
   5.  இது வேண்டாத வேலை
6.தண்ணி பாவம் ..
                                                                7.   வந்து ஒருக்கை பிடிங்க ..

                                                         
                                                                               

                                                           மீண்டும் சந்திப்போம்...Friday, September 6, 2013

ஆசான் ..

 
    கற்றுக்கொடுப்பவர்கள் எல்லாம் குருதான் !

    நீங்களும் எனக்கு ஒரு குருதான் .

   காற்றைப் போல் வந்தோம் 

   காணாமால் போனோம் ...!    Tuesday, April 16, 2013

காதல் ..
 உன்னுள் நானும் 

என்னுள் நீயும் 

நமக்குள் வந்தது 

காதல்  ....

Monday, April 1, 2013

சங்ககிரி, சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன் ஸ்ரீ புத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா

நண்பர்களே இது எனது முதுகலை ஆய்வு கோயில் .

       தமிழ்நாடு அரசு


              இந்துசமய  அறநிலையத்துறை

                 
                 சங்ககிரி,  சந்தைப்பேட்டை
              
     அருள்மிகு செல்லியம்மன்
               
            ஸ்ரீ புத்துமாரியம்மன்
               
     பொங்கல் திருவிழா
               
    அழைப்பிதழ்


                                  

                                                                           ̋சக்திதிருவருள் சாரமணம் தண்ணனின்

                                   முக்தி முதலாடும் மூலமது பக்தியுடன்

                                     சக்தி சக்தியென்று சாற்றிடுவோம் சந்தமும்          

 பக்தி பரவும் பதம்.”

                                                 

அன்புடையீர் வணக்கம்

      நிகழும் நந்தன வருடம் பங்குனி  மாதம் 6-ம் தேதி  19-3-2013 முதல்

        4-4-2013 வரை பல்வேறு நிகழ்ச்சி நிரல் படி விழா நடைபெற உள்ளது.


        அதுசமயம் பொது மக்களும், பக்தகோடிகளும் திரளாக வருகைத்தந்து

         சிறப்பித்து ஸ்ரீ செல்லியம்மன்,புத்துமாரியம்மன்  அருளைப் பெற 

         அன்புடன் வேண்டுகிறோம்.முக்கிய நிகழ்ச்சிகள்


       வரும் ஏப்ரல் மாதம் 1-04-2013  திங்கள் முதல் 4-4-2013 வரை விழா வெகு

 சிறப்பாக  நடைபெற உள்ளது

  1-04-2013 திங்கள

           இரவு சக்தி அழைத்தல்

 2-04-2013 செவ்வாய் காலை

           பூங்கரகம்

          அக்னிக்கரகம்

          அலகு குத்தல்

           வலம் வருதல்

இரவு 8 மணிக்கு

          முப்பாடு தீபம்

03-04-2013 புதன் காலை

          சேத்து முட்டி எடுத்தல்

         பொங்கல்

04-04-2013 வியாழன் காலை

         பூ அள்ளி விடுதல்

         இரவு மறுபூஜை

தினசரி மாலை 3.00 மணி

         அபிசேகம்

 இரவு  மஹா தீபாராதனைஇரவு நேரங்களில்


           தெருக்கூத்து

            திரைப்படம்

           ஆடலுடன் பாடல் போன்ற பல விதமான கலை நிகழ்ச்சிகள்

 நடைபெறும்.


வழி: சங்ககிரி பழைய பேருந்து நிலையம் இறங்கி

         அங்கிருந்து  எடப்பாடி செல்லும் வழியில் சங்ககிரி சந்தைப்பேட்டை

அருகே செல்லாண்டியம்மன் ஆலயம் உள்ளது

   அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக!


தொடர்புக்கு

          அர்ச்சகர்:  மாரிமுத்து

             அழைபேசி எண் 9842576366

          அர்ச்சகர்:   ஜெகதீசுவரன்

              அழைபேசி எண் 8760945266படக்காட்சிகள் 
                                                 செல்லியம்மன் 
                                                            
 புத்துமாரியம்மன்

               

அன்புடன் வரவேற்கிறோம் 


நன்றி