Pages

Wednesday, April 13, 2022

சிறந்த ஞானியின் கனவு

 

சிறந்த ஞானியின் கனவுசிறுகதை

        

 அன்று இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு தன்காதலி கயல்விழி நினைவால் வாடிக்கொண்டிருந்தான் செல்வந்தரின் மகன் ஞானி.

 நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. கையில் ஒரு பெட்டியுடன் கண்களில் காதலியின் வரவை எதிர்பார்த்தும், வாசலின்தூரத்தை, தன்தூக்கத்தைமறந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்.

 வெகுதூரத்தில் இருந்து நாய்கள் சத்தம் வெளவ், வெளவ்….. என்று அவன் காதுகளில் கேட்கிறது...

  ஓ! தன் காதலிதான் வருகிறாள் ஓடிவிடலாம் என நினைக்கிறான்.அவனது  பார்வை ரோட்டையே பார்த்தபடி இருந்தது.

 ஊர்க்காவலன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

ஞானியின் மனம் வாடியது

 எங்கே தன்காதலி வரமாட்டாளோ? என்ற எண்ணம் மனதில் ஒருபுறம் தோன்றியபடி இருந்தாலும் தன்காதலி தனக்கு துரோகம் செய்யமாட்டாள் என்பது ஞானிக்குத் தெரியும்.

 சற்றுநேரம் கழித்து கொலுசு சத்தம் சல,சல எனக் கேட்டது. அருகில் தன்காதலி பெட்டியுடன் வந்தாள் இருவரும் விடிவதற்குள் தன் ஊரைவிட்டு வெளியூருக்கு செல்ல முடிவெடுத்தனர்.

 யாருடைய மகன் என்று தெரிந்ததால் அவனுக்கு அங்கு தங்க வீடு கிடைத்தது.

 விடிந்தது, சில்லென்று குளிர்ஞானி தன் போர்வையை மூடியபடியே கண்விழித்துப் பார்க்கிறான்.

 வீட்டின் கதவுதட்டும் சத்தம் மெதுவாக கேட்க வீட்டின் உரிமையாளர்தான் தட்டுகிறார் என நினைத்து கதவைத் திறக்க நினைக்கயில் வெளியே ஒருபெரும் கூட்டம் இருப்பதுபோல் சத்தம் கேட்டது ஞானியின் காதுக்கு.

 கதவை திறக்கிறார் ஞானிக்கு ஒர் அதிர்ச்சி! வெளியே தன்தந்தையும், உறவினர்களும் நிற்கின்றனர்.

 அவ்வூரின் தலைவர் தன்தந்தைக்குத் தகவல் கொடுத்து விட்டார் என்பதை யூகிக்க அவனுக்கு அதிகநேரம் ஆகவில்லை...

 அவன் தந்தையோ தனக்கு ஒரே மகன் என்பதால் இருவரையும் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்.

 ஓர் நந்நாளில் திருமணம் பெரியோர்கள் ஆசியுடன் இனிதே நடந்தது.

 நாட்கள் கழிந்தன. ஞானிக்கு ஓர் அழகிய குழந்தை ஒன்று பிறந்தது.

 தங்கள் செல்வத்தைக் காட்டிலும் அக் குழந்தையிடம் காட்டிய அன்பு அக்குடும்பத்தில் அதிகம் காணப்பட்டது.

 வீட்டின் வெளியே அய்யா, அய்யா..என்ற சத்தம்

 யாரது என்றபடி வெளியே வந்த கயல்விழி கண்ணீர் மழையில் நனைகிறாள். ஆழ்ந்த சந்தோசத்துடன் தன்தாய், தந்தையைப் பார்க்கிறாள்.

 இதற்கிடையில் செல்வந்தர் மருமகளே! ஏம்மா மருமகளே.. எனக்கு காபி ஒன்னு போட்டுக் கொடும்மா என்கிறார்.

 எங்கே தன்தாய், தந்தை வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்தால் மாமனார் கோபப்படுவாரோ என நினைத்து வேகமாக உள்ளே செல்கிறாள் படியில் டப்,டப்என்று சத்தம் பார்த்தால் மாமனார் கீழே வந்து விட்டார்

 என்னாச்சிமா! ஏ! இப்படி ஓடி வர யாரு வந்திருக்காங்க? என்றபடி வெளியே பார்க்கிறார் கண்ணீருடன் வெளியே இருந்தவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் யார் என்று தெரிந்துகொண்டார்..

 உள்ளே வாருங்கள் என்று சொன்னவுடன் கயல்விழிக்கு பயம் திடுக்கிட்டது. என்ன நடக்குமோ? என்று மனதுக்குள் புலம்பியவாறு சமையலறைக்குச் சென்றாள்.

 மாமனார் கயல்விழியைக் கூப்பிட்டு வந்தவர்களுக்கு தண்ணீர் கொடும்மா என்றார்..

 பயம் ஒருபக்கம் இருக்க! சந்தோசம் ஒருபக்கம் இருக்க! தண்ணீர் கொண்டு வருகிறாள்..

 அதற்குள் இருவரிடையே சமாதானம் ஆகி ஒன்றாகி விட்டார்கள். சந்தோசத்துடன் செய்ய வேண்டிய தன்பணிகளை அவ்ஏழைச் சம்மந்தி தன்னால் முடிந்த சீர்களைச் செய்து விட்டு வாழ்த்தி வீடுதிரும்பினார்..

 கயல்விழி கதவில் சாய்ந்தபடி தன்தாய், தந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அழாதம்மா என்றபடி மாமனார் உள்ளே அழைத்துச் செல்கிறார்.

 சோபாவில் அமரச்செய்து இப்படித்தான் என்றவாறு தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் மாமனார். ஓரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள் உன் மாமியார் நான் ஒரு கூலித் தொழில் செய்யும் ஒருவரின் மகன்.

 சிறுவயதிலேயே வருமானம் இன்றி தன் தந்தை தொழிலான கூலித் தொழிலில் ஈடுபட்டேன்.

 ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்லும் போது உன் மாமியாரை நான் சந்திப்பேன். எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது .

ஆனால், திருமணம் நடக்குமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து வந்து இங்கு வாழ்கிறோம்..

 உன் மாமியாரோடு வாழ்ந்த வாழ்க்கை என்னை இந்த அளவுக்கு செல்வந்தனாக்கியது என்று கூறிக் கொண்டிருக்கும் போது ஆபிசுக்கு செல்வதற்காக ஞானி படியில் இறங்கி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து சரிம்மா நீ போய் உன் கணவரை வழி அனுப்பி விடும்மா என்றார்.

 எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சி நீயும் நல்லபடியா வாழனும்மா, வாழ்ந்து காட்டனும்மா,என்றார் மாமனார்.

 நாட்கள் பல கழிந்தது. குழந்தை துள்ளிக் குதித்த காலம் அக்குழந்தைக்கு எதிர்பாராத விதமாக செல்வமிருந்தும் குணமாக்க முடியாத நோய் வந்து விடுகிறது.

 இதனால் அக்குழந்தை பலனின்றி இறந்து விடுகிறது.

 செல்வந்தர் வீட்டில் இடியும், மின்னலும் வெடித்ததைப்போல் கண்ணீர்மழை பொழிந்தது. ஆனால்,

ஞானி மட்டும் அழவில்லை

 வீடு முழுவதும் குண்டூசி சத்தம் இன்றி சோகத்தில் மூழ்கின வழக்கம் போல் ஆபிசுக்கு கிளம்புவதற்காக ஞானி கிளம்புகிறான்.

 கயல்விழி பார்கிறாள். கோபம் தலைக்கேறியது ஏன் இப்படி இருக்கிங்க? நம் குழந்தை நம்மை விட்டுப் போய்விட்டது என்ற வருத்தமே உங்களுக்கு இல்லையா? என்று கேட்டாள்.

 தன் சட்டை பொத்தானை போட்டவாறு அப்படியே சோபா பக்கம் நெருங்கிய ஞானி அமைதியான நிலையில் அமர்ந்தார்.

 மேல் மாடியில் இருந்த செல்வந்தர் படியில் இருந்தபடி பார்க்கிறார்.

 வீட்டின் கடிகாரமணி ஓசை டக்,டக் என்று கேட்கிறது. காலை 8 மணி ஆயிற்று. கீழே வந்து தனது மகன் ஞானி அருகே அமர்ந்தார்.

 தன் மகனின் வருத்தத்தை உணர்ந்த அவர் மெதுவாக அணைத்து கவலை வேண்டாம் என்றவாறு குறிப்பிடுகிறார்.

 இருந்தாலும் ஏன்? அழமாட்டிங்கிறாய் என்று கேட்டார்.

 மெதுவாக நிமிர்ந்த ஞானி, நம் குழந்தை துள்ளிக் குதித்த அன்று இரவு நான் ஒரு கனவு கண்டேன் என்றார்.

தன் கனவை சொல்ல ஆரம்பித்தார்

 கயல்விழியும் சற்று நிமிர்ந்து அமர்ந்தாள் விடியற்காலைப் பொழுதில் நான் கண்ட கனவில் உனக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

 அக்குழந்தையை கண்ட நான் அன்போடு கொஞ்சுவதற்காகப் பக்கத்தில்  சென்று தொட ஆரம்பித்தேன்.

 அப்போதுதான் நான் கதறல் சத்தம் கேட்டு நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்.

 நான் அந்த இரண்டு குழந்தைகளை நினைத்து அழுவதா? இல்லை நம்  குழந்தையை நினைத்து அழுவதா? என்றான்..

 செல்வந்தருக்கும், கயல்விழிக்கும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

 அப்போது செல்வந்தர் எல்லாம் ஒரு கனவாக நினைத்து நாம் வாழத்தொடங்குவோம் என்றார்.

வழக்கம் போல் ஆபிசுக்கு சென்று விட்டார் ஞானி......

 

 

 

 

Thursday, October 24, 2019

பன்னாட்டுக் கருத்தரங்கம் அறிவிப்பு மடல்

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை – பொன்விழா ஆண்டு
பன்னாட்டுக் கருத்தரங்கம்
அறிவிப்பு மடல்
ISBN எண்ணுடன் கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும்
பேராசிரியர்கள் -ரூ.400/-
ஆய்வாளர்கள் – ரூ.300/-
வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் – $ 15
பங்கேற்பு ரூ.150/-
கட்டுரை அனுப்ப இறுதிநாள்  – 20.11.2019

பன்னாட்டுக் கருத்தரங்கம் அறிவிப்பு மடல்



சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை – பொன்விழா ஆண்டு
பன்னாட்டுக் கருத்தரங்கம்
அறிவிப்பு மடல்
ISBN எண்ணுடன் கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும்
பேராசிரியர்கள் -ரூ.400/-
ஆய்வாளர்கள் – ரூ.300/-
வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் – $ 15
பங்கேற்பு ரூ.150/-
கட்டுரை அனுப்ப இறுதிநாள்  – 20.11.2019




Friday, July 13, 2018

உலகத்தமிழ் மின்னிதழில் என்னுடைய ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிக்க நன்றி உலகத்தமிழ் சங்கம் மதுரை. காலாண்டிதழ் 2018

உலகத்தமிழ் மின்னிதழில் என்னுடைய ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. 








மிக்க நன்றி உலகத்தமிழ் சங்கம் மதுரை. காலாண்டிதழ் 2018

Friday, June 1, 2018

அம்மா


நீ
உயிரையும்
மெய்யையும்
ஒன்று சேர்க்கும்
உயிர்மெய்.
அம்மா
அன்பே கடவுள்
என்பது எதிர்மறை
அன்பே அம்மா
என்பது நேர்மறை
ஏனெனில்
கடவுள் கூட
கைம்மாறு கேட்கிறது
நீ கைம்மாறு
கேட்காமல்
அன்பு காட்டும்
கடவுள்..!

Wednesday, May 30, 2018

வறுமையில் வாழும் குடும்பம் - சிறுகதை

 


          ஒரு ஊருல பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இருந்தாலும் அந்த பல குடும்பங்களில் ஒரு குடும்பம் மட்டும் மிகவும் வறுமையில் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா ஆகிய ஏழு பேர் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம்.
அப்பாவும், அம்மாவும் வேலைக்கு சென்றால்தான் தினமும் அவர்களுக்கு உணவு. இல்லாவிட்டால் அவர்கள் பட்டினியாக தான் இருக்க வேண்டும். இரண்டு பேரும் தினமும் வேலைக்கு செல்வார்கள். மூன்று குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.
ஒரு நாள் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது வீட்டில் யாருமே இல்லை. பாட்டிக்கு மிகவும் காய்ச்சல் அதிகமானது. வேலைக்குபோய்ட்டு திரும்பி வந்த அவருடைய மகனும் மருமகளும் அம்மா இப்படி படுத்துக் கிடப்பதைப் பார்த்துக் கத்தினர். அவருடைய மகன் அம்மா என்று கத்திக் கொண்டே அவரைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனையில் சேத்தினார்.
சிறிது நேரம் கழித்து போய் உங்க அம்மாவைப் பாக்கலாம் என்றார் டாக்டர். அவரும் சிறிது நேரம் கழித்து தன் அம்மாவை பார்க்க உள்ளே சென்றார். அம்மா என்று மெதுவாக கூப்பிட்டார். அவரும் கண்களை விழித்தார் அவள் எனக்கு ஒன்ருமில்லை நீ அழுவாதப்பா என்றாள். பின்பு தான் அவனுக்கு நம்பிக்கை வந்தது. சிறிது நேரம் அம்மாவிடம் பேசிவிட்டு வீட்டிற்க்குப் புறப்பட்டார்.
வீட்டிற்குச் சென்றதும் அவருடைய இரண்டாவது குழந்தை மகா பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கி வந்திருந்தது. அவர் வீட்டிற்கு போனதும் அந்த குழந்தை அப்பா என்று கத்திக் கொண்டே அது வாங்கிய பரிசை அப்பாவிடம் காட்டியது. அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
இருந்தாலும் அவருடைய மனதில் எல்லாக் குழந்தைகளைப் போலவும் நம் குழந்தையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் உண்டு. ஆனால் குடும்ப சூழ்நிலைகாரணமாக மூன்று குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டியுள்ளதே என்று நினைத்து மனம் வருந்தினார். இருந்தாலும் அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் அரசுப் பள்ளியில் படித்தாலும் நம்முடைய குழந்தைகள் நன்றாகப் படித்து பரிசுகள் எல்லாம் வாங்குகின்றதே என்று மிகவும் சந்தோஷப்பட்டார்.
அவருடைய மனைவியும் குடும்ப சூழ்நிலைக்கேற்ப நடந்துக் கொள்வார். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளிடம் அன்பாக நடந்துக் கொள்வார். அவருடைய அத்தை, மாமாவை தன் பெற்றோர் போல் பாத்துக் கொள்வார். அதனால் அவளை எல்லாருக்கும் பிடிக்கும். இவர்கள் வறுமை போக வழி உண்டோ..? இவர்கள் வறுமையில் வாழ்ந்தாலும் பிறருக்கும் அவர்களால் முடிந்த உதவியை செய்வார்கள். வறுமையில் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தன் வறுமையை வெளிக்காட்டாமல் வாழ்ந்தார்.

Sunday, April 9, 2017

கல்வியில் தேர்வு எழுதும் முறையை கண்டுபிடித்தவர்

 கல்வியில் தேர்வு எழுதும் முறையை 

கண்டுபிடித்தவர்





Story: 
Henry Fischel was the first person who invented the "EXAMS". Please forward to all students.. He has spoilt the fun of our life.

Other Versions
This is Henry Mishel - the first American person who invented the "EXAMS".

Hoax or Fact:
Possibly Hoax.

Analysis:
These picture messages shared online in various versions and languages claim to show an American person called Henry Fischel (or Henry Mishel) who supposedly is the first person to invent Exams. The claims are possibly hoax.

Concept of Exams
The first country to implement a nationwide standardized test was ancient China. Called as the imperial examination, established by the Sui Dynasty in 605 AD, it was meant to select able candidates for specific governmental positions. This system was abolished by the Qing Dynasty 1300 years later in 1905, but England adopted this examination system in 1806 for Her Majesty's Civil Service, and was later applied to education, which further influenced other parts of the world gradually. This is how the concept of examinations for students developed.

Unrelated Pictures
The first picture in question, said to be Henry Fischel, is in fact, Henry Kimball Hadley (20 December 1871 – 6 September 1937), an American composer and conductor who is not related to the concept of education or exams. The second (and third) pictures in Image Gallery, also shown as the Henry Fischel who invented exams, is actually Henry Detlev Fishel, a psychotherapist in New York; nothing relating him to exams again.

Possible Origin

There’s another person Henry A. Fischel who is also attributed to the invention of exams. Henry A. Fischel (November 20, 1913, Bonn - March 20, 2008) was a professor emeritus of Near Eastern languages and cultures at Indiana University. He was an influential figure in founding the Jewish Studies Program and the department of Religious Studies at Indiana University. You can read more about him here. It appears like; this might be misunderstood or misinterpreted to convey that Henry Fischel is the first person to invent exams. Notably, the stories are mostly shared on humor platforms. So the claims that an American person called Henry Fischel (or Henry Mishel) is the first person to invent exams as such are possibly hoax.