வணக்கம் நண்பர்களே !
எனக்கு ஒருமுறை கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு
எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது . சரி சும்மா இருப்பதற்கு பதிலாக மாணவர்களை எதாவது
செய்ய சொல்ல்லாமே என்று யோசித்தேன். கவிதை எழுதுவீர்களா? என்று கேட்டேன் கவிதை வராது
வேறெதாவது கேழுங்கள் என்றனர் அம் மாணவர்கள். முடியாது கவிதை வரும் என்று சொல்லி
ஹைக்கூ கவிதை எழுதுங்கள் என்றேன். கவிதையே வராது என்று சொன்ன அம்மாணவர்கள் எழுதிய
கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கே.எஸ்.ஆர் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
இரண்டாம் ஆண்டு
பயிலும் BSC.,biotecnology மாணாக்கர்களின்
கவிதைகள்......
கவிதைகள்......
பள்ளி என்ற
ஒன்றில்தான்
நம் நட்பு என்ற பூ
மலர்ந்தது!
கல்லூரி என்ற
ஒன்றில்தான்
மலர்ந்த பூ மணம்
வீசியது..!
-வீ.கோமதி
மற்றவர்களிடம்
ஆயிரம் முறை
பழகி பிரிந்திருந்தாலும் கூட!
உன்னிடம் ஒருமுறை
பழகி பிரிவதற்கு
கண்ணீர்த்துளிகள் மட்டும் மிச்சம்...!!!!
வானத்தில்
மழை இல்லை போலும்
மக்களின் பஞ்சம்
தீர்க்க!
தன்னை வஞ்சம்
செய்து கொள்கிறாள்
அருவி....!!
-ச.அரவிந்த்
பசியால் அழுத
குழந்தை
திடீரென சிரித்தது
தாயின் அன்பினால்...!
ஏணிப்படி வைத்தும்
எட்டவில்லை
நம் இருவர் நட்பின்
எல்லை!!!
-எஸ்.கார்த்திக்
ஆயிரம் காதலர்கள்.
கடற்கரை முழுநிலவில்
முத்தக்காட்சி!
காதலிக்க மனமின்றி
கண்ணீர் வடித்தது
கருமேகம் மட்டும்!
கடலலையின் காதல்
கண்டு...
----- செ. பிரபாகரன்
நீயும்! நானும்!
கல்லூரி எனும்
சாலையில் சந்தித்தோம்
நண்பன் எனும் மரம்
நமக்கு நிழலாக இருந்தது.
-சதீஸ்
மழையைப் போல நண்பன்
மழை இல்லையெனில்!
மனிதன் இல்லை..
குழந்தை அழுகிறது
தகப்பன் கஞ்சி
காய்ச்சுகிறான்
சாப்பிடுவதற்கு
அல்ல!
சுவரில் ஒட்ட...!!!
-மூர்த்தி
வானில் இருந்து
மழைத்துளிகள்
வரவில்லையென்றால்!
மனிதன் வாழ
மண்ணில் இருந்து
உயிர்த்துளிகள்
வராது!!
- இரா.விஸ்வநாதன்
நட்பு என்பது
சூரியன் போல!
காதல் என்பது
சந்திரன் போல!
இரண்டும்
இல்லையெனில்
இரவும்,பகலும் இல்லை-அதுபோல
நட்பும்,காதலும்
இல்லையெனில்
வாழ்க்கை
என்பதில்லை...!
- எஸ்.நந்தகுமார்
கடவுள் தந்த பூமி
கடலில் கரைஞ்சி போச்சி!
நேசம் தந்த உயிறு
நெஞ்ச செதச்சி போச்சி!
செதஞ்சி போன நெஞ்சி
செத்து போனதடி-மறுபடியும்
உன்ன பாக்கையிலே
மாலையோட!
மழைமேகம்
காத்திருக்க!
மறுமேகம் தடுக்குதடி-அதுபோல
என் அருகே நீ
இருக்க!
என்னுள்ளம் விடியுதடி-உன்
மலழைப் பேச்சினிலே
மயங்கி
மனமோ மறுகுதடி-அந்த
ஒரு
நொடியினிலே...!!!!
- ந.ரவிக்குமார்
வேரின்றி
இருந்தாலும்
கூடையிலிருந்த பூக்கள்
மலர்ச்சியோடு
இருந்தன
மழைக்காலங்களில்!!!
வறுமை..
கோயிலில் அம்மனுக்கு
பட்டுப்புடவை
ஏக்கத்துடன்
பார்த்தால்
ஏழைப்பெண்!!
--- எம்.ராமச்சந்திரன்
முத்தம் தவறில்லை
தவறென்று தர்க்கம்
செய்யாதே!
வேரெதுவாலும்
அன்பின் ஆழத்தை
அவ்வளவு அழுத்தமாய்
சொல்லமுடியாது...!
----- சே.மோகன்
காதல், நட்பு
நட்பு என்பது வழி!
காதல் என்பது விழி!
வழி இல்லையென்றால்
விழி இருந்து என்ன பயன்?
விழி இல்லையென்றால்
வழி இருந்து என்ன பயன்?
நட்பு எனும் வழி !
வாழ்க்கையை
அடைவதற்கு.
காதல் எனும் விழி !
வழியில் பயணம்
செய்வதற்கு...
பொய் சொல்லி
விட்டேன் அன்பே!
நீ அழகென்று!
நீயே அழகிற்கெல்லாம்
அழகென்று தெரியாமல்!
கண்மொழி
நீ விழிகளால் பேசிய
மொழிகளைக் கேட்டு
விவரம் அறியா!
குழந்தை ஆனேன்
அந்நேரம்..
ஆகாயத்தில்
அழகற்ற நிலவு! அங்கே
உன் முகத்தை
வைத்தேன்.
முகம் சுழித்துக்
கொண்டது நிலவு
என்னவள் எத்தனை
அழகு!
-தமிழரசன்