ஒரு ஊருல பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இருந்தாலும் அந்த பல குடும்பங்களில் ஒரு குடும்பம் மட்டும் மிகவும் வறுமையில் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா ஆகிய ஏழு பேர் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம்.
அப்பாவும், அம்மாவும் வேலைக்கு சென்றால்தான் தினமும் அவர்களுக்கு உணவு. இல்லாவிட்டால் அவர்கள் பட்டினியாக தான் இருக்க வேண்டும். இரண்டு பேரும் தினமும் வேலைக்கு செல்வார்கள். மூன்று குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.
ஒரு நாள் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது வீட்டில் யாருமே இல்லை. பாட்டிக்கு மிகவும் காய்ச்சல் அதிகமானது. வேலைக்குபோய்ட்டு திரும்பி வந்த அவருடைய மகனும் மருமகளும் அம்மா இப்படி படுத்துக் கிடப்பதைப் பார்த்துக் கத்தினர். அவருடைய மகன் அம்மா என்று கத்திக் கொண்டே அவரைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனையில் சேத்தினார்.
சிறிது நேரம் கழித்து போய் உங்க அம்மாவைப் பாக்கலாம் என்றார் டாக்டர். அவரும் சிறிது நேரம் கழித்து தன் அம்மாவை பார்க்க உள்ளே சென்றார். அம்மா என்று மெதுவாக கூப்பிட்டார். அவரும் கண்களை விழித்தார் அவள் எனக்கு ஒன்ருமில்லை நீ அழுவாதப்பா என்றாள். பின்பு தான் அவனுக்கு நம்பிக்கை வந்தது. சிறிது நேரம் அம்மாவிடம் பேசிவிட்டு வீட்டிற்க்குப் புறப்பட்டார்.
வீட்டிற்குச் சென்றதும் அவருடைய இரண்டாவது குழந்தை மகா பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கி வந்திருந்தது. அவர் வீட்டிற்கு போனதும் அந்த குழந்தை அப்பா என்று கத்திக் கொண்டே அது வாங்கிய பரிசை அப்பாவிடம் காட்டியது. அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
இருந்தாலும் அவருடைய மனதில் எல்லாக் குழந்தைகளைப் போலவும் நம் குழந்தையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் உண்டு. ஆனால் குடும்ப சூழ்நிலைகாரணமாக மூன்று குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டியுள்ளதே என்று நினைத்து மனம் வருந்தினார். இருந்தாலும் அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் அரசுப் பள்ளியில் படித்தாலும் நம்முடைய குழந்தைகள் நன்றாகப் படித்து பரிசுகள் எல்லாம் வாங்குகின்றதே என்று மிகவும் சந்தோஷப்பட்டார்.
அவருடைய மனைவியும் குடும்ப சூழ்நிலைக்கேற்ப நடந்துக் கொள்வார். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளிடம் அன்பாக நடந்துக் கொள்வார். அவருடைய அத்தை, மாமாவை தன் பெற்றோர் போல் பாத்துக் கொள்வார். அதனால் அவளை எல்லாருக்கும் பிடிக்கும். இவர்கள் வறுமை போக வழி உண்டோ..? இவர்கள் வறுமையில் வாழ்ந்தாலும் பிறருக்கும் அவர்களால் முடிந்த உதவியை செய்வார்கள். வறுமையில் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தன் வறுமையை வெளிக்காட்டாமல் வாழ்ந்தார்.