Pages

Tuesday, December 16, 2014

சிற்றிலக்கியங்கள் - தோற்றமும் வளர்ச்சியும்



      தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முன் வைக்கும் முனைவர் ந.வீ.ஜெயராமன் “தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு, ஐந்தாம்     நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்து, ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகி, எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி, ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்து,பதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும், பரணியாகவும் அரும்பி,    பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகி, பதினான்காம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்து, பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது” என்று குறிப்பிடுகிறார்.

சிற்றிலக்கியம் - விளக்கம்

1)
சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
2)
அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
3)
பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
4)
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
5)
இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.


 சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை
       
          சிற்றிலக்கியம் என்பதனுள் 96 வகையான இலக்கியங்கள் காணப்படுகின்றன என்று பொதுவாகக் கூறும் வழக்கம் உள்ளது. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூல் கூறுகின்றது. இந்நூல்,

    பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
    தொண்ணூற் றாறுஎன்னும் தொகையதுஆம்

என்கிறது.

(பிள்ளைக் கவி = பிள்ளைத் தமிழ் என்ற இலக்கியம் தொகை = எண்ணிக்கை)

அதாவது, பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை முதலாகப் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள் ஆகும்.

வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியும் 96 இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகின்றது.

சிவந்தெழுந்த பல்லவன் உலா என்ற நூலில், தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான் (கோலம் = அழகு; பிரான் = தலைவன்) என்ற தொடர் இடம் பெறுகின்றது.

இவற்றால், சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறப்படும் பொதுவான மரபு இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆனால், இக்காலத்தில் முந்நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் உள்ளன என்று அறிஞர்கள் கூறுவர். எனவே, சிற்றிலக்கிய வகைகள் இவ்வளவு என்று வரையறுத்துக் கூற இயலாது எனலாம்.

நூல்களின் அமைப்பு

     அளவில் சிறிதாகச் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன. பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல், ஒரு சிலதுறைகளைப் பற்றிய ஆழமான பார்வை உடையனவாக அவை அமைகின்றன.

     அளவு சுருக்கமானதாக அமைவதால், குறைந்த காலத்தில் படிக்கும் எளிமை உடையனவாக அமைகின்றன.

    வட்டாரச்    சார்புடையனவாகத்    திகழ்கின்றன. காப்பியங்களைப் போல் உலகப் பார்வையை     இவை  பெறுவதில்லை .

     தெய்வத்தை, மன்னனை, வள்ளலைப் புகழ்வதற்காக எழுதப்பட்டன.

     இவற்றுள் பல சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த கருத்துக்கேளாடு அமைகின்றன.

     பக்தி சார்ந்த சிற்றிலக்கியங்கள் அதிகமாய் அமைகின்றன. 

காலம்

     ஆற்றுப்படை     இலக்கியங்கள் தோன்றிய சங்க  காலத்திலிருந்தே சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றாலும், சிற்றிலக்கியம் உச்ச நிலையில் இருந்த காலத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. “பல்லவர் காலத்தைப் பக்தி இலக்கியக் காலமென்றும் இடைக்காலச் சோழர் காலத்தைக் காப்பியக் காலமென்றும் அதன் மேலோங்கிய தன்மையாற் கூறுகிறோமே, அதுபோல நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம்”என்கிறார் டாக்டர் தமிழண்ணல். அதாவது கி.பி.15, 16, 17ஆம் நூற்றாண்டுகளை நாம் சிற்றிலக்கியக் காலமென்று அழைக்கலாம். நாயக்கர் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றி வளர்ந்தன.

வகைகள்

     புற்றீசல் போல முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகை தமிழில் இருந்தாலும், அவற்றுள் தலையாயவையாக இருப்பன பதினான்கு வகைகளே ஆகும்.

     (1) ஆற்றுப்படை
     (2) அந்தாதி
    (3) மாலை
     (4) பதிகம்
     (5) கோவை
     (6) உலா
     (7) பரணி
     (8) கலம்பகம்
     (9) பிள்ளைத் தமிழ்
     (10) தூது
     (11) சதகம்
     (12) மடல்
     (13) பள்ளு
     (14) குறவஞ்சி

எனும் 14 வகைகள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் புகழ் மிக்கனவாய்த் திகழ்கின்றன.

96 வகை சிற்றிலக்கியங்கள்

      தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.

தொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.


இலக்கிய வகை - பொருள்


1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம் - -
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - -
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை - -
11. இருபா இருபஃது - -
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் - வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி - -
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை -
28. கண்படை நிலை -
29. கலம்பகம் - 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.
36. கைக்கிளை - ஒரு தலைக்காமம்.
37. கையறுநிலை - உற்றார் இறந்த பொழுது வருந்துவது.
38. சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது.
39. சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது.
40. சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து.
41. செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல்.
42. செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம்.
43. தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள்
44. தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள்
45. தண்டக மாலை --
46. தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்.
47. தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்.
48. தானை மாலை - கொடிப்படை.
49. தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது.
50. துயிலெடைநிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல்.
51. தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல்.
52. தொகைநிலைச் செய்யுள் - -
53. நயனப்பத்து - கண்.
54. நவமணி மாலை - -
55. நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல்.
56. நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று.
57. நான்மணி மாலை --
58. நூற்றந்தாதி - -
59. நொச்சிமாலை - மதில் காத்தல்.
60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
61. பதிற்றந்தாதி - -
62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
63. பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது.
64. பல்சந்த மாலை --
65. பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது.
66. பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள்.
67. பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.
68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள்.
69. புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு.
70. புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க.
71. புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க.
72. பெயர் நேரிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
73. பெயர் இன்னிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
74. பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல்.
75. பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு.
76. பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து.
77. போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி.
78. மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண்.
79. மணிமாலை - -
80. முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது.
81. மும்மணிக்கோவை --
82. மும்மணிமாலை - -
83. மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது.
84. வசந்த மாலை - தென்றல் வருணனை.
85. வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு.
86. வருக்கக் கோவை --
87. வருக்க மாலை --
88. வளமடல் - மடலேறுதல்.
89. வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல்.
90. வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம்.
91. வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது.
92. விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.
93. விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது.
94. வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல்.
96. வேனில் மாலை - இளவேனில், முது வேனில் வருணனை.

பேரிலக்கியமும் சிற்றிலக்கியமும்
சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி என்பன போன்றவை பெருங்காப்பியங்கள். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்றவை சிறுகாப்பியங்கள். இவை போன்ற இலக்கியங்களைப் பேரிலக்கியம் என்று அழைப்பது மரபு ஆகும். தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலியவற்றைச் சிற்றிலக்கியம் என்பர். பேரிலக்கியத்திற்கும் சிற்றிலக்கியத்திற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றைக் காண்போம்:


வரிசை எண்
பேரிலக்கியம்
சிற்றிலக்கியம்
1. பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை அதிகம் பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை குறைவு.
2. அகப்பொருளிலோ புறப்பொருளிலோ பல துறைகளை உள்ளடக்கியது ஏதேனும் ஒரு துறையை மட்டும் கூறும்
3. பேரிலக்கியம் தலைவனின் முழு வாழ்க்கையையும் விளக்கிக் கூறும். சிற்றிலக்கியம் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கூறும்.
4. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் கூறும். ஏதேனும் ஒன்றைக் கூறும்.


பயன்
     சிற்றிலக்கியங்கள் மூலம் ஓரளவு தமிழ்ப் பண்பாட்டினை, தமிழக வரலாற்றினை அறிய முடிகிறது.
     கற்பனை ஆற்றலைப் பெருக்குவதில் சிற்றிலக்கியங்கள் பேருதவி புரிகின்றன.
     பள்ளு போன்ற சிற்றிலக்கியங்கள் மூலமாக அக்கால மக்களின் சமூக வாழ்வியலை நம்மால் அறிய முடிகிறது.
     பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் அழகியல் தன்மையோடு காணப்படுகின்றன.
     தெய்வங்கள் மீது அமைந்த சிற்றிலக்கியங்கள் மூலம், ஊர் வரலாறு, புராணக் கதைகள், மக்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அறியலாம்.
     மொத்தத்தில் சிற்றிலக்கியங்கள் தமிழ் வளர்ச்சிக்குப்   பேருதவி செய்வனவாய் அமைந்துள்ளன.
     அளவிலே சிறியதாயிருந்தாலும் பெரும் சுவையைத் தருவனவாய்ச் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன. 

..........................................................           thanks to google search and www.tamilvu.org

Thursday, May 29, 2014

நீங்களும் கவிதை எழுதலாமே...!


  வணக்கம் நண்பர்களே !
        எனக்கு ஒருமுறை கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது . சரி சும்மா இருப்பதற்கு பதிலாக மாணவர்களை எதாவது செய்ய சொல்ல்லாமே என்று யோசித்தேன். கவிதை எழுதுவீர்களா? என்று கேட்டேன் கவிதை வராது வேறெதாவது கேழுங்கள் என்றனர் அம் மாணவர்கள். முடியாது கவிதை வரும் என்று சொல்லி ஹைக்கூ கவிதை எழுதுங்கள் என்றேன். கவிதையே வராது என்று சொன்ன அம்மாணவர்கள் எழுதிய கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
இரண்டாம் ஆண்டு பயிலும் BSC.,biotecnology மாணாக்கர்களின் 

கவிதைகள்...... 

தோழி.
 

 பள்ளி என்ற ஒன்றில்தான்
 நம் நட்பு என்ற பூ மலர்ந்தது!
 கல்லூரி என்ற ஒன்றில்தான்
 மலர்ந்த பூ மணம் வீசியது..!
                         -வீ.கோமதி

தோழி.
 


 மற்றவர்களிடம் ஆயிரம் முறை
 பழகி பிரிந்திருந்தாலும் கூட!
 உன்னிடம் ஒருமுறை பழகி பிரிவதற்கு
 கண்ணீர்த்துளிகள் மட்டும் மிச்சம்...!!!!


மழை..



 வானத்தில்
 மழை இல்லை போலும்
 மக்களின் பஞ்சம்
 தீர்க்க!
   தன்னை வஞ்சம்
 செய்து கொள்கிறாள்
 அருவி....!!
           -ச.அரவிந்த்

அன்பு..
 

 பசியால் அழுத குழந்தை
  திடீரென சிரித்தது
 தாயின் அன்பினால்...!


தொலைவு..
 

 ஏணிப்படி வைத்தும்
  எட்டவில்லை
 நம் இருவர் நட்பின்
         எல்லை!!!
                   -எஸ்.கார்த்திக்



கடற்கரை..
 

 வட்டநிலவின் வளைவை காண!
 ஆயிரம் காதலர்கள்.
 கடற்கரை முழுநிலவில்
 முத்தக்காட்சி!
 காதலிக்க மனமின்றி
 கண்ணீர் வடித்தது
 கருமேகம் மட்டும்!
 கடலலையின் காதல் கண்டு...
                  -----  செ. பிரபாகரன்


நண்பன்.. 

 நீயும்! நானும்!
 கல்லூரி எனும் சாலையில் சந்தித்தோம்
 நண்பன் எனும் மரம் நமக்கு நிழலாக இருந்தது.
                                 -சதீஸ்

நண்பன..
 

 மழையைப் போல நண்பன்
  மழை இல்லையெனில்!
 மனிதன் இல்லை..



பசியில் குழந்தை..
 

 குழந்தை அழுகிறது
 தகப்பன் கஞ்சி காய்ச்சுகிறான்
 சாப்பிடுவதற்கு அல்ல!
 சுவரில் ஒட்ட...!!!
              -மூர்த்தி


உயிர்த்துளிகள்
 



 வானில் இருந்து மழைத்துளிகள்
 வரவில்லையென்றால்!
 மனிதன் வாழ
 மண்ணில் இருந்து உயிர்த்துளிகள்
 வராது!!
              - இரா.விஸ்வநாதன்


காதலும், நட்பும்..

 


 நட்பு என்பது சூரியன் போல!
 காதல் என்பது சந்திரன் போல!
 இரண்டும் இல்லையெனில்
 இரவும்,பகலும் இல்லை-அதுபோல
 நட்பும்,காதலும் இல்லையெனில்
 வாழ்க்கை என்பதில்லை...!
                - எஸ்.நந்தகுமார்


ஒரு நொடியினிலே...
 

 கடவுள் தந்த பூமி
  கடலில் கரைஞ்சி போச்சி!
 நேசம் தந்த உயிறு
  நெஞ்ச செதச்சி போச்சி!
 செதஞ்சி போன நெஞ்சி
  செத்து போனதடி-மறுபடியும்
 உன்ன பாக்கையிலே மாலையோட!
  மழைமேகம் காத்திருக்க!
 மறுமேகம் தடுக்குதடி-அதுபோல
  என் அருகே நீ இருக்க!
 என்னுள்ளம் விடியுதடி-உன்
  மலழைப் பேச்சினிலே மயங்கி
 மனமோ மறுகுதடி-அந்த
  ஒரு நொடியினிலே...!!!!
              - ந.ரவிக்குமார்


மகிழ்ச்சி..
 

 
 வேரின்றி இருந்தாலும்
  கூடையிலிருந்த பூக்கள்
 மலர்ச்சியோடு இருந்தன
  மழைக்காலங்களில்!!!


 வறுமை..
  கோயிலில் அம்மனுக்கு
   பட்டுப்புடவை
  ஏக்கத்துடன் பார்த்தால்
   ஏழைப்பெண்!!
               --- எம்.ராமச்சந்திரன்


முத்தம்..

 முத்தம் தவறில்லை
 தவறென்று தர்க்கம் செய்யாதே!
 வேரெதுவாலும்
 அன்பின் ஆழத்தை அவ்வளவு அழுத்தமாய்
 சொல்லமுடியாது...!
           ----- சே.மோகன்


காதல், நட்பு
 நட்பு என்பது வழி!
 காதல் என்பது விழி!
 வழி இல்லையென்றால் விழி இருந்து என்ன பயன்?
 விழி இல்லையென்றால் வழி இருந்து என்ன பயன்?
 நட்பு எனும் வழி !
 வாழ்க்கையை அடைவதற்கு.
 காதல் எனும் விழி !
 வழியில் பயணம்
 செய்வதற்கு...


 காதல்
 


  பொய் சொல்லி விட்டேன் அன்பே!
  நீ அழகென்று!
  நீயே அழகிற்கெல்லாம்
  அழகென்று தெரியாமல்!
  கண்மொழி
  நீ விழிகளால் பேசிய மொழிகளைக் கேட்டு
  விவரம் அறியா!
  குழந்தை ஆனேன்
  அந்நேரம்..


அழகு 
 

 ஆகாயத்தில்
 அழகற்ற நிலவு! அங்கே
 உன் முகத்தை வைத்தேன்.
 முகம் சுழித்துக் கொண்டது நிலவு
 என்னவள் எத்தனை அழகு!
                   -தமிழரசன்











Friday, February 21, 2014

திருவள்ளுவரின் பார்வையில் காதலியின் கண்கள் ...

காதலில் மிகுந்த சுவை தரக்கூடியது  காதலியின் கண்கள் என்கிறார் வள்ளுவர் ..


         திருவள்ளுவர் காலத்தில் பெண்களும் 'சைட்' அடித்தார்கள் என்பதற்கு இக் குறள் சான்று ..

                        "கண்களவு  கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் 
                        செம்பாக மன்று பெரிது "     -குறள் 1091

காதலியை சந்திப்பது , அவளுக்காக காத்திருப்பது , அவளோடு பைக்கில் 
 ஊர்சுற்றுவது , அவளுக்கு பரிசு வாங்கித்தருவது , ஓடாத படத்துக்கு ஓரடிக்கட் போடுவது , ஒரே இளநியில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது , இப்படியெல்லாம் பல வகை இருந்தாலும் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சைட் அடிக்கும் காதலியின் கண்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார்..

                     கண்களவு          =திருட்டுத்தனமாய் கண்ணால்
                    கொள்ளுஞ்         = பார்த்துக் கொள்ளும்
                    சிறு நோக்கங்    = சிறிய நோக்கம்
                    காமத்திற்             = காதலில்
                    செம்பாக மன்று = சரி பாதி
                    பெரிது                    =அதை விட பெரிது

காதலியானவள் திருட்டுத்தனமா லுக்கு விடுவது இருக்கு பாருங்க அதில் தான் காதலனுக்கு பெரிய சந்தோசம் .

"மச்சி பாரே அவ என்னை பாக்குறா என்பான் காதலன் "

கண்களவு கொள்ளுஞ் சிறு நோக்கங்  - கண்ணால் களவு கொள்ளுவார்களாம்

எதை என்றால் ?  காதலனின் மனதை ..

இந்த சிறு பார்வையே போதும் ஆண்கள் விழுந்து விடுவார்கள் ,இந்த பார்வையிலேயே இவ்வளவு களவாணித்தனம் இருக்குது என்றால் பெரு நோக்காய் இருந்தால் காதலன் கதி அதோ கதி தான்..

பெண்ணை விட இந்த உலகில் பெருமையானது எதுவுமில்லை என்பது வள்ளுவப்பெருமானின் கருத்து . 


                                                                                         நன்றி
  

                       








                                    







                        

Tuesday, February 4, 2014

சிரிக்க சிந்திக்க ....







1.பிளான் பண்ணாம எதையும் செய்யகூடாது ஓகே .















                           2.  சைக்கிள் போட்டிக்கு எடுத்துப்போங்க..






  3.இதுவல்லவா அன்பு ...


















                                                       4. என்ன ஒரு சேவை ..

                                               




   5.  இது வேண்டாத வேலை








6.தண்ணி பாவம் ..
















                                                                7.   வந்து ஒருக்கை பிடிங்க ..

                                                         
                                                                               

















                                                           மீண்டும் சந்திப்போம்...