Pages

Saturday, October 29, 2016

தீபாவளிக்கு நீங்கள் கண்டிப்பாக போட வேண்டிய கோலங்கள் 2016

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பட முடிவு
 
 
 
கோலம் என்பது நம்முடைய பாரம்பரியம். அரிசி கோலம், மாவு கோலம், பூக்கோலம், ரங்கோலி கோலம். இவையாவுமே கண்களுக்கு வண்ணமயமாக காட்சி தந்து மனதிற்கு இதமளிப்பவை.
பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தக் கோலங்களை சரியாக போடவில்லை என்றால் அது அலங்கோலமாகிவிடும். ஆனால் கோலம் போடுவது என்னமோ அவ்வளவு கடினமான விஷயமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த நேரத்தில் கோலம்போடுங்கள். அதுதான் மிக அழகான கோலமாக இருக்கும்.
தீபாவளி இன்னும் சில நாட்களில் நம் வீட்டின் கதவை தட்டவிருக்கின்றது. அந்தத் தீபாவளியை இந்த வண்ணமயமான கோலங்களால் வரவேற்கும் வகையில் ஆஸ்ட் ரோ உலகம் உங்களுக்காக சில கோல வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையான அரிசியை எடுத்து உணவுக்கு இடும் வர்ணங்களை சேர்த்து சிறிது நீர்விட்டு கிளறுங்கள். இந்த வர்ணங்கள் கடைகளிலே கிடைக்கும். இந்த வர்ணங்களின் அளவு பொருத்து அது வெளிர் நிறமாக வேண்டுமா அல்லது கருமையான நிறமாக வேண்டுமா என்பதை நிர்ணயிக்கலாம்.
உணவுக்கு இடும் வர்ணங்களை உபயோகிப்பதால் இந்த அரிசியை உண்ணும் ஜீவராசிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. அதேவேளையில் இந்தக் கோலங்களில் ஜிகினா போன்ற கலவைகளை சேர்ப்பதைத் தவிருங்கள்!
இந்தக் கோலங்களை உண்ணிப்பாக கவனித்து வீட்டில் நீங்களும் போடலாம். சில கோல வகைகள் சற்று சிரத்தை எடுத்து போடுவதாகவும், சில கோல வகைகள் சுலபமாக போடும் வகையிலும் உண்டு, உங்கள் வசதிற்கேற்ப கோலம் போடுங்கள்!


































thanks to goooogle

 

Saturday, June 4, 2016

முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்


சிறப்பு அழைப்பாளர்கள்



கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
திருச்செங்கோடு - 637 215
தமிழ்த்துறை
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - 2016
இடம் : AC GALLERY HALL         நாள் : 30.05.2016             நேரம்: காலை 10 மணி
                                                         நிகழ்ச்சி நிரல்
                            
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை         :  முனைவர் சி.ரா. சுரேஷ்
                                            தமிழ்த்துறைத் தலைவர்
தலைமையுரை    :   அரிமா. டாக்டர். கே.எஸ். ரங்கசாமி MJF அவர்கள்
                                            தாளாளர் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்
முன்னிலை            :    திரு.ர. சீனிவாசன் அவர்கள்
                                             செயலர் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்
வாழ்த்துரை           :    திருமதி. கவிதா சீனிவாசன் அவர்கள்
                                            செயல் இயக்குநர்
                                            கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல்                                 
                                                                                கல்லூரி(தன்னாட்சி)
                                           முனைவர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்
                                           முதல்வர், கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் 
                                                                                                  கல்லூரி(தன்னாட்சி)
சிறப்புரை                 :   முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள்
                                           முதல்வர் கே.எஸ்.ரங்கசாமி மகளிர் கலை                                                                                              அறிவியல் கல்லூரி 
                                          தேநீர் இடைவேளை
                                          ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல்
                                          பங்கேற்பாளரின் ஏற்புரை
நன்றியுரை              :    திரு.மு.சதீஸ்குமார்
                                            உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
                                                           நாட்டுப்பண்
                                                    அனைவரும் வருக.



கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)
திருச்செங்கோடு - 637 215
தமிழ்த்துறை
முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - 2016

30.05.2016 திங்கள் கிழமை அன்று காலை 10 மணிக்கு

நடைபெற்றது. இதில் 

தமிழ்த்துறையின் தலைவர் வரவேற்புரை

   நல்கிய போது எடுத்த புகைப்படம் 


 கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி
                      (தன்னாட்சி)

 முதல்வர்  வே. இராதாகிருஷ்ணன்  அவர்கள்

   வாழ்த்துரை நல்கிய போது எடுத்த புகைப்படம்


     கே.எஸ்.ரங்கசாமி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
                    
     முதல்வர்  முனைவர் மா. கார்த்திகேயன்  அவர்கள்

   சிறப்புரை நல்கிய போது எடுத்த புகைப்படம்




   ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல்

      தமிழ்த்துறையின் பேராசிரியர்

 திரு.வீரா முருகானந்தம் அவர்கள் பேசிய போது
  


 தமிழ்த்துறையின் பேராசிரியர்

 முனைவர்.ப.இராஜேஷ் அவர்கள் பேசிய போது

 தமிழ்த்துறையின் பேராசிரியர 
 முனைவர்.ப.இராஜஷ் அவர்கள் பேசிய போத
தமிழ்த்துறையின் பேராசிரியர்

 முனைவர்.த.கண்ணன் அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர்

 முனைவர்.து.சரஸ்வதி அவர்கள் பேசிய போது
தமிழ்த்துறையின் பேராசிரியர்

 முனைவர்.ந.சங்கீதா அவர்கள் பேசிய போது
  
தமிழ்த்துறையின் பேராசிரியர்

 முனைவர்.ப.பிரதீபா அவர்கள் பேசிய போது



     தமிழ்த்துறையின் பேராசிரியர்

 திரு.மு.சத்தியராஜ். அவர்கள் பேசிய போது 
 

 தமிழ்த்துறையின் பேராசிரியர்

 திரு.செ.தங்கராஜ் அவர்கள் பேசிய போது
 தமிழ்த்துறையின் பேராசிரியர் மற்றும் முன்னாள்
 மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர்
 திரு.செ.தங்கராஜ் அவர்கள் பேசிய போது


 தமிழ்த்துறையின் பேராசிரியர்


 திரு.மு.சதீஸ்குமார். அவர்கள் பேசிய போது




மாணாக்கர்களின் ஏற்புரை



கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் 
வணிகவியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்
பேசிய போது
       

கலந்து கொண்ட மாணாக்கர்கள்
நன்றியுரை


 தமிழ்த்துறையின் பேராசிரியர்

 திரு.மு.சதீஸ்குமார். அவர்கள் பேசிய போது
நன்றியுரை நவிழ்ந்த பேராசிரியர்
திரு.மு.சதீஸ்குமார் அவர்கள் பேசுகையில் இது
போன்ற நிகழ்வுகளை தமிழ்த்துறை  நடத்தும்
என்றும்  வருகை புரிந்த அனைவருக்கும்
நன்றியினைத் தமிழ்த்துறையின் சார்பாக
தெரிவித்தார்.
விழா சிறப்பாய் முடிவுற்றது

Wednesday, May 25, 2016

சிறந்தஞானியின்கனவு – சிறுகதை



           சிறந்தஞானியின்கனவுசிறுகதை



   அன்று இரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டு தன் காதலி கயல்விழி நினைவால் வாடிக் கொண்டிருந்தான் செல்வந்தரின் மகன் ஞானி
நேரம் ஓடிகொண்டே இருந்தது.
 தன்பெட்டியுடன் காதலியை எதிர்பார்த்து வாசலின் தூரத்தை, தன்தூக்கத்தை மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்.
  வெகுதூறத்தில் இருந்து நாய்கள் சத்தம் வெளவ், வெளவ்…..என்று காதுகளில் கேட்கிறது
  தன் காதலிதான் வருகிறாள் ஓடிவிடலாம் என நினைக்கிறான் பார்வை ரோட்டையே பார்த்தபடி இருந்தது ஊர்க்காவலன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்
        ஞானியின் மனம் வாடியது
எங்கே தன் காதலி வரமாட்டாளோ என்ற எண்ணம் மனதில் ஒருபுறம் தோன்றியபடி இருந்தாலும் தன்காதலி தனக்குது ரோகம் செய்யமாட்டாள் என்பது ஞானிக்குத் தெரியும்.
     சற்று நேரம் கழித்து கொலுசுசத்தம் கேட்டது அருகில் தன்காதலி பெட்டியுடன் வந்தாள் இருவரும் விடிவதற்குள் தன் ஊரை விட்டு வெளியூருக்கு செல்கின்றனர்.
   யாருடைய மகன் என்று தெரிந்ததால் அவனுக்கு அங்கு தங்க வீடு கிடைத்தது
   விடிந்தது  சில்லென்று குளிர் ஞானி தன்போர்வையை மூடியபடியே கண்விழித்து பார்க்கிறான்
    வீட்டின் கதவு தட்டும் சத்தம் மெதுவாக கேட்க வீட்டின் உரிமையாளர்தான் தட்டுகிறார் எனநினைத்து கதவை திறக்க நினைக்கயில் வெளியே ஒருபெரும் கூட்டம் இருப்பது போல் சத்தம் கேட்டது ஞானியின் காதுக்கு.
    கதவை திறக்கிறார் ஞானிக்கு ஒர் அதிர்ச்சி வெளியே தன்தந்தையும், உறவினர்களும் நிற்கின்றனர்.
    அவ்வூரின் தலைவர் தன்தந்தைக்கு தகவல் கொடுத்து விட்டார் என்பதை யூகிக்க அவனுக்கு அதிகநேரம் ஆகவில்லை.
  அவன் தந்தையோ தனக்கு ஒரேமகன் என்பதால் இருவரையும் சேர்த்துவைக்க முடிவு செய்கிறார்.
    ஓர் நந்நாளில் திருமணம் பெரியோர்கள் ஆசியுடன் இனிதே நடந்தது
நாட்கள் கழிந்தன. ஞானிக்கு ஓர் அழகிய குழந்தை ஒன்று பிறந்தது
    தங்கள் செல்வத்தைக் காட்டிலும் அக்குழந்தையிடம் காட்டிய அன்பு அக்குடும்பத்தில் அதிகம் காணப்பட்டது.
     வீட்டின் வெளியே அய்யா, அய்யா..என்ற சத்தம் யாரது என்றபடி வெளியே வந்த கயல்விழி கண்ணீர்மழையில் நனைகிறாள் ஆழ்ந்த சந்தோசத்துடன் தன்தாய், தந்தையை பார்க்கிறாள்.
   இதற்கிடையில் செல்வந்தர் மருமகளே ஏம்மாமருமகளே எனக்கு காபி ஒன்னு போட்டு கொடும்மா என்கிறார். எங்கே தன்தாய், தந்தை வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்தால் மாமனார் கோபப்படுவாரோ என நினைத்து வேகமாக உள்ளே செல்கிறாள்.
   படியில் டப்,டப்என்று சத்தம் பார்த்தால் மாமனார் கீழே வந்துவிட்டார் என்னாச்சிமா இப்படி ஓடி வர யாரு வந்திருக்காங்க என்றபடி வெளியே பார்க்கிறார்.
   கண்ணீருடன் வெளியே இருந்தவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டார்.
   உள்ளே வாருங்கள் என்று சொன்னவுடன் கயல்விழிக்கு பயம் திடுக்கிட்டது என்ன நடக்குமோ என்று மனதுக்குள் புலம்பியவாறு சமையலறைக்குச் சென்றாள்.
    மாமனார் கூப்பிட்டு வந்தவர்களுக்கு தண்ணீர் கொடும்மா என்றார்
பயம் ஒருபக்கம் இருக்க சந்தோசம் ஒருபக்கம் இருக்க தண்ணீர் கொண்டு வருகிறாள்.
  அதற்குள் இருவரிடையே  சமாதானம் ஆகி ஒன்றாகி விட்டார்கள் சந்தோசத்துடன் செய்ய வேண்டிய தன்பணிகளை அவ்ஏழை சம்மந்தி தன்னால் முடிந்த சீர்களை செய்துவிட்டு வாழ்த்தி வீடு திரும்பினார்.
  கயல்விழி கதவில் சாய்ந்தபடி தன்தாய், தந்தையை பார்த்துக்கொண்டிருக்கிறாள்
   அழாதம்மா என்றபடி மாமனார் உள்ளே அழைத்துச்செல்கிறார் சோபாவில் அமரச்செய்து இப்படித்தான் என்றவாறு தன்கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் மாமனார்
   ஓர்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள் உன்மாமியார் நான் ஒருகூலி தொழில் செய்யும் ஒருவரின் மகன் சிறுவயதிலேயே வருமானம் இன்றி தன்தந்தை தொழிலான கூலித் தொழிலில் ஈடுபட்டேன்
ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்லும்போது உன்மாமியாரை நான் சந்திப்பேன் எங்கள் இருவருக்கும் காதல்மலர்ந்தது ஆனால் திருமணம் நடக்குமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துவந்து இங்கு வாழ்கிறோம்.
  உன்மாமியாரோடு வாழ்ந்த வாழ்க்கை என்னை இந்த அளவுக்கு செல்வந்தனாக்கியது  என்று கூறிக்கொண்டிருக்கும் போது ஆபிசுக்கு செல்வதற்காக ஞானி படியில் இறங்கிவந்து கொண்டிருந்ததை பார்த்து சரிம்மா நீ போய் உன்கணவரை வழி அனுப்பிவிடும்மா
    எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சி நீயும் நல்லபடியா வாழனும்மா வாழ்ந்து காட்டனும்மா என்றார் மாமனார்.
     நாட்கள் பல கழிந்தது குழந்தை துள்ளிக்குதித்த காலம் அக்குழந்தைக்கு எதிர்பாராதவிதமாக செல்வமிருந்தும் குணமாக்க முடியாத நோய் வந்து விடுகிறது
    இதனால் அக்குழந்தை பலனின்றி இறந்து விடுகிறது
செல்வந்தர் வீட்டில் இடியும், மின்னலும் வெடித்ததைப் போல் கண்ணீர் மழை பொழிந்தது ஆனால்
     ஞானிமட்டும் அழவில்லை
 வீடு முழுவதும் குண்டூசி சத்தம் இன்றி சோகத்தில் மூழ்கின வழக்கம் போல் ஆபிசுக்கு கிளம்புவதற்காக ஞானி கிளம்புகிறான்.
    கயல்விழி பார்கிறாள் கோபம் தலைக்கேறியது ஏன் இப்படி இருக்கிங்க நம்குழந்தை நம்மை விட்டுப்போய் விட்டது என்ற வருத்தமே உங்களுக்கு இல்லையா? என்று கேட்டாள்
   தன் சட்டை பொத்தானை போட்டவாறு அப்படியே சோபா பக்கம் நெருங்கிய ஞானி அமைதியான நிலையில் அமர்ந்தார்.
    மேல் மாடியில் இருந்த செல்வந்தர் படியில் இருந்த படிபார்க்கிறார்
வீட்டின் கடிகாரமணி ஓசை கேட்கிறது காலை 8 மணி ஆயிற்று கீழே வந்து தனது மகன் ஞானி அருகே அமர்ந்தார்.
    தன் மகனின் வருத்தத்தை உணர்ந்த அவர் மெதுவாக அணைத்து கவலை வேண்டாம் என்றவாறு குறிப்பிடுகிறார்
    இருந்தாலும் ஏன் அழமாட்டிங்கிறாய் என்று கேட்டார்
மெதுவாக நிமிர்ந்த ஞானி நம்குழந்தை துள்ளிக்குதித்த அன்று இரவு நான்   ஒரு கனவு கண்டேன் என்றார்.
  தன் கனவை சொல்ல ஆரம்பித்தார்
கயல்விழியும் சற்று நிமிர்ந்து அமர்ந்தாள் விடியற்காலைப் பொழுதில் நான் கண்ட கனவில் உனக்கு இரட்டைக்குழந்தை பிறந்தது
  அக்குழந்தையை கண்ட நான் அன்போடு கொஞ்சுவதற்காக பக்கத்தில் சென்று தொட ஆரம்பித்தேன்
அப்போது தான் நான் கதறல் சத்தம் கேட்டு நான் தூக்கம்கலைந்து எழுந்தேன்.
   நான் அந்த இரண்டு குழந்தைகளை நினைத்து அழுவதா? இல்லை நம்குழந்தையை நினைத்து அழுவதா? என்றான்...............