பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தக் கோலங்களை சரியாக போடவில்லை என்றால் அது அலங்கோலமாகிவிடும். ஆனால் கோலம் போடுவது என்னமோ அவ்வளவு கடினமான விஷயமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த நேரத்தில் கோலம்போடுங்கள். அதுதான் மிக அழகான கோலமாக இருக்கும்.
தீபாவளி இன்னும் சில நாட்களில் நம் வீட்டின் கதவை தட்டவிருக்கின்றது. அந்தத் தீபாவளியை இந்த வண்ணமயமான கோலங்களால் வரவேற்கும் வகையில் ஆஸ்ட் ரோ உலகம் உங்களுக்காக சில கோல வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையான அரிசியை எடுத்து உணவுக்கு இடும் வர்ணங்களை சேர்த்து சிறிது நீர்விட்டு கிளறுங்கள். இந்த வர்ணங்கள் கடைகளிலே கிடைக்கும். இந்த வர்ணங்களின் அளவு பொருத்து அது வெளிர் நிறமாக வேண்டுமா அல்லது கருமையான நிறமாக வேண்டுமா என்பதை நிர்ணயிக்கலாம்.
உணவுக்கு இடும் வர்ணங்களை உபயோகிப்பதால் இந்த அரிசியை உண்ணும் ஜீவராசிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. அதேவேளையில் இந்தக் கோலங்களில் ஜிகினா போன்ற கலவைகளை சேர்ப்பதைத் தவிருங்கள்!
இந்தக் கோலங்களை உண்ணிப்பாக கவனித்து வீட்டில் நீங்களும் போடலாம். சில கோல வகைகள் சற்று சிரத்தை எடுத்து போடுவதாகவும், சில கோல வகைகள் சுலபமாக போடும் வகையிலும் உண்டு, உங்கள் வசதிற்கேற்ப கோலம் போடுங்கள்!
thanks to goooogle
No comments:
Post a Comment