Pages

Monday, July 30, 2012

காதல் மேல் நம்பிக்கை வையுங்கள் ....




என் நண்பர் சொன்னார்..

                          ஞாயிற்றுக்கிழமை என்றால்  நண்பர்கள் 


எல்லாம் கூடி ஜாலியாக பேசிக்கொள்வது வழக்கம்


 அப்போது ஒரு நண்பர் சொன்னார் நம் ஊரின்


திருமணமண்டபத்தின் சுவற்றில் 7 ம் வகுப்பு 


படிக்கும்  இரு மாணவிகள் சிரித்துக்கொண்டே 


கவிதை எழுதினார்கள் என்று !






       பொதுவாக சுவற்றிலோ ,கோவில்களின் 


சுவற்றிலோ, சாக்பீஸ் அல்லது அடுப்புக்கரி ,


இவற்றால் கிறுக்குவது வழக்கம் அதே போல் அந்த 


மாணவி


எழுதியக் கவிதை


காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களை
நம்பாதே ....!

       இந்தக்கவிதையை பார்த்த சிலபேர் இந்த சின்ன 


பொண்ணுங்களுக்கு எப்படி தோணுது பாரு


உடனே அதை மாற்றி எழுதினார் ஒருவர்

         காக்கும் நாயை
         நம்பு !
         காதலிக்கும் ஆண்களையும்
         நம்பு !


எனது பார்வையில்

         காக்கும் நாயை
       நம்பு !
       காதலிக்கும் பெண்ணை
       நம்பாதே !


இப்படியே போனால் சொல்லிக்கொண்டுதான் 


இருக்க வேண்டும் காதலில் ஆணோ? பெண்ணோ? 


நன்றி உள்ள பிராணியான நாய் மேல் வைத்த


நம்பிக்கையை ஏன் காதல் மேல் வைப்பதில்லை ....?














Thursday, July 19, 2012

வெறுப்பவன் ..





"தாய்க்காக

மனைவியை

வெறுப்பவனும் -மிருகம்.

மனைவிக்காக

தாயை

வெறுப்பவனும் -மிருகம். "

Tuesday, July 17, 2012

காதலன் நிலை ..?



அன்று
அவளை
காதலிக்க
  class cut அடித்தேன் .
இன்று
அவளை
  மறக்க
  bar'il cut'ing அடிக்கிறேன் .

Wednesday, July 11, 2012

உடமை ..





"காதல் என்பது

             பொது உடமை

கஷ்டம் மட்டும் தான்

             தனி உடமை "

Tuesday, July 3, 2012

வேலை நிறுத்தம் ..








கண்ணீர் கூட

வேலை நிறுத்தம்

செய்கிறது .

எங்கே -என்

கண்மணி கரைந்து

விடுவாள் என்று !

Thursday, June 21, 2012

உன் மௌனத்தின் வலி .






ஒரு துளி 

இரத்தம் வரவில்லை!ஆனால் 

என் இதயம் 

வலிக்கிறது -நீ 

பேசாமல் இருக்கும் 

மௌனத்தைப் பார்த்து ...




Monday, May 14, 2012

பிரிவு உபசார விழா:





   ஒவ்வொரு கல்லூரியிலும் விடைபெறு விழா என்பது நடத்தப்பட வேண்டிய

ஒன்றாகும் .அது தான் முதலாமாண்டு மாணவர்களுக்கு சிறப்பு கடமையும்

கூட .அந்த வகையில் நான் பயிலும் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் -11

தமிழ்த் துறையில் விடை பெறு விழாவானது 10 .04 .2012 செவ்வாய்க்கிழமை

அன்று முதலாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் தலைமை நண்பர்களுக்கு

நடத்தினோம் .விழாவில் தொடக்கமாக

     தமிழ்த்தாய் வாழ்த்து:

    முதலாமாண்டு மாணவிகள்

                      ப.சத்யா ,
                     சி.சசிகலா

 தொகுப்புரை :
          
         விழாவில் முதலாமாண்டு மாணவனாகிய நான் [மு. சதீஷ்குமார்] ஒரு

        சிறு கவிதையின்  மூலம் வெளிப்படித்தினேன்.

பிரிவு

"பிரிவு என்பது
நிரந்திரமில்லை !
பிரிவு இல்லாமல்
வாழ்கை இல்லை !
பிரிவு என்பதே ஓர்
சந்திப்பிற்க்குத்தான்.
பிரிவு என்பது
உண்மையில் பிரிவே இல்லை .
பிரிவுதான் நம் வாழ்வின்
அடுத்த கட்டத்திற்கு
செல்லும் பாதை .  "

வரவேற்புரை :

            முதலாமாண்டு மாணவர் தே.பாரதி  அவர்கள் வரவேற்புரை வகுத்தார் .

சிறப்புரை :

      இவ் விழாவிற்கு எங்கள் ஆசான் தமிழ்த்துறைத் தலைவர்

      முனைவர் :பெ.மாதையன் அய்யா அவர்கள் சிறப்புரை வகுத்தார் .

அவர் பேசிய பொது எடுத்த படம்  :




இவ் விழாவில் எங்கள் துறை பேராசிரியர்கள் :

தி .பெரியசாமி
வை .இராமராஜபண்டியன்
சு .வேலாயுதன்
க .மைதிலி
இரா.வசந்தமாலை

போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் :



மாணவர்களின் கருத்துரை :

முதலாமண்டு மாணவர்கள் தம் நன்றியினை தெரிவித்தும் கவிதை ,பாடல் ,பேச்சு ,போன்ற வகையில் வெளிப்படித்தினர் .

அவர்களின் பெயர்கள் வருமாறு :

பெ .மகேஸ்வரி
ஜெ,மாமல்லன் (கவிதை )
கிருஷ்ணவேணி  (கவிதை )
போன்றோர் .

ஏற்புரை வழங்குதல்:

இதனை தொடர்ந்து மாணவர்கள் பங்களிப்பில் தலைமை நண்பர்கள் ஏற்புரை வகுத்தனர் ஒவொருவரும் தம் உள்ளார்ந்த நினைவுகளையும் ,நன்றியினையும் தெரிவித்தனர் .

குறிப்பிடத்தக்கவர்கள் :

ம .விசுவநாதன்
ர .ராதிகா
கி .வசந்தக்குமார்
ரா.கெஜலக்ஷ்மி



நன்றியுரை :

விழாவின் இறுதியாக முதலாமாண்டு மாணவர் s .தினேஷ்குமார் நன்றியுரை பேசினார் .

ஆக நண்பர்களே விடை பெருவிழா என்பது பிரிவின் வருத்தமாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் பாதை என்று எண்ணி வாழ்த்தி தலைமை நண்பர்களோடு எப்போதும் இருங்கள் .



பிரிவு பற்றி என் அன்புத் தோழி எழுதிய கவிதை:

"எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
பிரிவதற்க்கெனவே
இணைந்தோம் .
கல்லுரி வாழ்வில்
கவலை ஏது?
சிறகில்லாமல்
பறந்தோம் .
வகுப்பில் பதிந்திருக்கும் நம்
உள்ளங்காலின் ரேகைகள்
யாராக இருந்தாலும் கிண்டல்
அடித்த நம் நினைவுகள்
ஆண்டுகள் இரண்டு நொடியைபோல
போனது எப்படி ?தெரியவில்லை
காலன் செய்த மாயம் .
இனிமேல் எங்கே
என்ன ஆவோம்
இந்த நிமிடம் தெரியவில்லை ?
சிரிக்கும்  காலம் முடிந்தது
இனிமேல்
           " வாழ்க்கை வேறு உணருங்கள்
             நம்மைப் பிரித்த காலன்
            அனுமதி தந்தால்
             மீண்டும் சந்திப்போம்
             விடைகொடுங்கள் "
இலக்கியம்
           "  பாரி
            வள்ளலாய் இருந்ததனால்
            முல்லைக்குத்
            தேர் கொடுத்திருக்கிறான்
            தோழனாய் இருந்திருந்தால்
            தோள் கொடுத்திருப்பான் ."......





ஆக பிரிவு உபசார விழாவைக் கொண்டாடுங்கள் நண்பர்களின் அன்பிலேயே

 எப்போதும் இருங்கள்  





                                                                                                    நன்றி .