Pages

Saturday, March 12, 2011

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........




                 தமிழ் மொழியில் மொத்தம் 246  எழுத்துக்களில் 42  எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு .
   
        அவற்றில் சில  :


             VAO போன்றத் தேர்வுகளில்  இவை கேட்கப்படலாம் :

      
        ஆ -   பசு 

        ஈ -    பறக்கும்பூச்சி

        ஊ -உணவு 

        ஏ-அம்பு 

       ஐ -அழகு ,தலைவன் 

        ஓ-மகிழ்ச்சி 

  மேலும் 
  ம- வின் மா , மீ , மு , மே,மை ,மோ.. பற்றியது

         மா -அழகு ,மேன்மை 
      மீ -மேலே ,உயர்வு 

      மூ -மூப்பு (முதுமை ),மூன்று 

      மே-அன்பு ,மேம்பாடு 

      மை -அஞ்சனம் (கண்மை ),எழுதுமை 

       மோ-முகர்தல்  

       
  த- வின்  இனம் தா,தீ ,தூ,தே,தை  பற்றியது

         தா -கொடு ,அழிவு, தாண்டு

         தீ -நெருப்பு 
     
         தூ -தூய்மை ,பகை 

         தே -கடவுள் 

          தை -தமிழ் மாதம்


ப  -வின் இனம்  பா ,பூ,பே ,பை ,போ, பற்றியது

          பா -அழகு ,பாட்டு

        பூ-மலர் ,புவி 
       பே -நுரை ,அக்கம் 

       பை -கொள்கலம் ,இளமை 

       போ-செல் 

ந -வின் இனம் நா ,நீ ,நே ,நை ,நோ, பற்றியது

      நா -நாக்கு ,அயலார் 

     நீ -நீ (முன்னிலை )

      நை -வருந்து 

     நோ -நோய் ,துன்பம் 

    

க -வின் இனம் கா,கூ, கை,கோ பற்றியது

      கா -சோலை 

      கூ-பூமி 

      கை -உறுப்பு 
     கோ -வேந்தன் 

வ -வின் இனம் வா ,வீ ,வை ,வௌ பற்றியது

      வா -வருகை

      வீ -மலர் ,விரும்புதல் 
      வை -வைத்தல் ,வைதல்

       வௌ -வவ்வுதல் ,

ச -வின் இனம்  சா ,சீ,சே ,சோ பற்றியது 

        சா -சாதல் ,சோர்தல் 

        சீ -வெருப்புச்சொல்  ,சீத்தல் 

        சே-காளைமாடு ,சிவப்பு 

       சோ -மதில் ,நகல் 


என்பனப் போன்று   பல  வகை உண்டு  தெரிந்து  பயன் பெறுங்கள்  ...........

                                                                                       
                                                                                                     நன்றி

    
        


        

        

      
         

No comments:

Post a Comment