Pages

Saturday, March 5, 2011

நீங்கள் காதலிக்கிறீங்களா...............?

நீங்கள் காதலிக்கிறீங்களா...............?


















எது உண்மையானக்காதல்  என்று  உங்களுக்கு தெரியுமா .......?


சரி காதல் பற்றின சிந்தனைகள் மூலம் சில கவிதைகள் பார்ப்போம்..




                     


ஒருகவிஞன் காதலைப்பற்றி குறிப்பிடும் போது .....

                 காதல் என்பது 
            கைத் துடைக்கும் 
            காகிதம்  போன்றது     என்கிறார் ......

இனொருவர் காதலில் பெண்கள்தான் ஏமாற்றுகிறார்கள்  என்கிறார்


                 காதலுக்கு  கண்ணில்லை
                 அது அன்று !
                 காதலிக்க  உண்மையான
                 பெண்ணில்லை!  
                 அது இன்று ...

இதை விடுங்க காதல் ஒருவர் வாழ்க்கையோடு  ஒப்பிடும் போது ..

                        கட்டாயம்  காதல்  செய்யுங்கள்
                ஏனெனில்  சந்தோசம் மட்டும்
                வாழ்க்கையல்ல ..


இந்தக்  காதலையே  உயிருடன்  ஒருவர் குறிப்பிடும்போது!


                          ஒரு வார்த்தையில்               
                  உயிர் வாழ்வதும் !
                  ஒருவார்த்தைக்காக                      

                  உயிர் வாழ்வதும்
                  காதலில் மட்டும் தான் .   என்கிறார்
   



ஆப்பு எல்லோருக்கும் உண்டு .
காதலில்  ஆப்பு  எப்படி  வரும்  என்றுத்  தெரியுமா ?

 பாருங்கள்...

                     தினம் ஒரு பூ கொடுத்தேன்  
              அவளுக்கு -அவள்
              ஒரே பூ கொடுத்தாள்
              எனக்கு  அதான்    
              ஆப்பு ..

இன்னும் சற்றுத்  தேடிப்பார்த்தால்  காதலுக்காக இதயத்தையே 

இரும்பென்கிறார்கள்   ..

                      உன் கண்கள் என்னும்
                காந்தத்தால்  என்னை
                கட்டி இருந்தாய் -பின்னர்
                தான் தெரிந்தது -உன் இதயம்
                இரும்பென்று . 
                                
மேலும் காதலிப்பவர்கள் சிலர் காதலியிடம் காதல்  கடிதம்  கொடுத்தால்

என்ன நடந்தது  என்று பாருங்கள் .
       
                     அவளை நினைத்து -கவிதை
               எழுதி  அவளிடம்  கொடுத்தேன்
               படித்து விட்டு  கேட்டா பாரு !
               ஒரு கேள்வி  அண்ணா யாரையாவது
               லவ்  பன்றீங்களா.........என்று ?

 இன்னும் கொஞ்சம்  சொல்லப் போனால்  கெட்டவன் போல்
 யார் நடிக்கிறார்களோ  அவர்களுக்குத்தான்   காதல்  ஜெயிக்குமம்
 நல்லவனுக்கு காதல் ஜெயிப்பது  மிகவும் குறைவுதான் .


          இதற்கு  இந்த கவிதை சான்று ..

                    ஏனோ என்னை  விரும்ப -அவளுக்கு
              விருப்பம் இல்லை !
              பிடிக்காததால் அல்ல !
              நான் நல்லவன்  போல்
              நடிக்காததால்.

   சரிங்க காதலைப்பத்தி  சொன்னா இப்படியே சொல்லிகிட்டுதான் 
   இருக்கணும் .   ...    

 உண்மையான  காதலுக்கு  எனக்கு  ஒரு செல்லிடைபேசி  குட்டிக் கதை 
வந்துச்சி  கதையப் படிச்சித்  தெரிஞ்சிக்கோங்க ...
                
                உண்மையானக்  காதல்

          ஒருத்தன்  ஒரு கண்ணுத்தெரியாத
          பெண்ணைக்  காதலித்தான்  ..
           என்னைக் கை விடமாட்டியேனு  
          அவ கேட்டா கண்டீப்பா உன்ன         
           கல்யாணம் பண்ணிக்கிறேனு
          அவன் சத்தியம் செய்தான் ..
          அவளுக்கு  கண்  ஆபிரேசன் நடந்துச்சி
          கண் தெரிஞ்சுச்சி .-அவளுக்கு 
         அப்போதான் தெரிஞ்சுச்சி -அவனுக்கும்  
          கண் தெரியாதுன்னு! அதனால 
          அவ கல்யாணம்  பண்ணிக்க  முடியாதுன்னு 
          சொல்லிட்டாள் ...........
          அவன்  கொஞ்ச  தூரம் போய்

           திரும்பி   அவக்கிட்ட  ஒன்னு  சொன்னான் 



                        என் கண்ணை  பத்திரமா  பாத்துக்கோ ......
          
ஆக நண்பர்களே  காதலிக்க கூடாதுனு சொல்லலை  காதலுக்காக  சாகாதிங்க.

               காதலுக்காக சாகவும்  கூடாது காதலிக்காமல் 
           சாகவும்  கூடாது ..








  இதை கடைப் பிடித்து  உங்க வாழ்க்கைல  ஜெயித்துக் காட்டுங்க...


                         மீண்டும்  நல்ல காதலோட  சந்திக்கிறேன் ....






































































1 comment: