என் நண்பர் சொன்னார்..
ஞாயிற்றுக்கிழமை என்றால் நண்பர்கள்
எல்லாம் கூடி ஜாலியாக பேசிக்கொள்வது வழக்கம்
அப்போது ஒரு நண்பர் சொன்னார் நம் ஊரின்
திருமணமண்டபத்தின் சுவற்றில் 7 ம் வகுப்பு
படிக்கும் இரு மாணவிகள் சிரித்துக்கொண்டே
கவிதை எழுதினார்கள் என்று !
பொதுவாக சுவற்றிலோ ,கோவில்களின்
சுவற்றிலோ, சாக்பீஸ் அல்லது அடுப்புக்கரி ,
இவற்றால் கிறுக்குவது வழக்கம் அதே போல் அந்த
மாணவி
எழுதியக் கவிதை
காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களை
நம்பாதே ....!
இந்தக்கவிதையை பார்த்த சிலபேர் இந்த சின்ன
பொண்ணுங்களுக்கு எப்படி தோணுது பாரு
உடனே அதை மாற்றி எழுதினார் ஒருவர்
காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களையும்
நம்பு !
எனது பார்வையில்
காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் பெண்ணை
நம்பாதே !
இப்படியே போனால் சொல்லிக்கொண்டுதான்
இருக்க வேண்டும் காதலில் ஆணோ? பெண்ணோ?
நன்றி உள்ள பிராணியான நாய் மேல் வைத்த
நம்பிக்கையை ஏன் காதல் மேல் வைப்பதில்லை ....?