Pages

Saturday, April 1, 2017

அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள் எது தெரியுமா?




        எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, 

வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி 

அப்துல் கலாம் கூறியுள்ளார்.

                 “அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
                   உள்ளழிக்க லாகா வரண”
                                                                           (அதிகாரம்: அறிவுடைமை குறள் எண்:421)

  இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு 

மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு 

வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத 

எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து 

நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த 

விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது 

உண்மை.

திருக்குறள்தான் வழிகாட்டி

     ஒருமுறை ராமேஸ்வரம் பள்ளியில் பேசிய அவர், உங்களைப் போன்று 

சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் 

மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு 

வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி 

முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் 

பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி 

நடத்தியது, திருக்குறள் தான் என்று கூறினார்.
எது கனவு
    இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. மக்கள் தொகை தான் 

இந்தியாவின் மிகப்பெரிய பலமே. உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. 

உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது 

ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை 

நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க 

வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும்.
தோல்வியை தோல்வியடைச் செய்யுங்கள்
  
 தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். 

அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் 

சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, 

விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் 

மகானாக முடியும்.
நிறையுரை: 
  
விழிப்புடன் இருக்கத் துணை செய்யும் கருவியாகவும் அழிக்க இயலாத 

காவற்கோட்டையாகவும் உள்ளது அறிவு என்னும் பாடல்.
  
அறிவு அற்றம் காக்குங் கருவி; பகைவராலும் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரணும் அது என்பது பாடலின் பொருள்.
  
 இக்குறள் அறிவுடைமையால் என்ன பயன் என்பதை விளக்குகிறது. அறிவு 

ஒருவனுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் கருவியாக உதவுகிறது; மற்றும் 

அது நுண்பொருளாக இருப்பதால் எவராலும் அழிக்க முடியாததாக உள்ளது 

என்று அறிவின் சிறப்பையும் கூறுகிறது.
அற்றம் காக்கும் என்ற சொல் குறிப்பது என்ன?
  
 கருவி என்ற சொல்லுக்குச் சாதனம் என்பது பொருள்.
  
 செறுவார்க்கும் என்றது பகைவர்க்கும் என்ற பொருள் தரும்.

   உள்ளழிக்கல் என்பது உட்புகுந்து அழிப்பது என்று விளக்கப்படும்.
  
 அரண் என்ற சொல் கோட்டையைக் குறிப்பது.
 
அற்றம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் 'இடையூறு, துன்பம், முடிவு, குற்றம் 

செய்தல்” என்ற பொருளில் வந்தது. ஒருவரது வாழ்க்கையில் குற்றம் 

நிகழாமல் காத்துக் கொள்வது மிகத் தேவை. அதற்குரிய விழிப்புணர்வைத் 

தருவது அறிவு.
   

அறிவு என்பது ஒருவரது உயிரோடு ஒட்டிய கருவி. மாந்தர்க்குத் குறையோ, 

இடையூறோ, பாதிப்போ அல்லது சோர்வோ வரும்பொழுது அதிலிருந்து 

உடனடியாகக் காக்கும் ஆயுதம் அவரது அறிவேயாகும். மனிதன் தன்னைக் 

காத்துக் கொள்ள எத்தனையோ வழிகளுண்டு. உடல்பலம், செல்வம், 

செல்வாக்கு, அரசின் உறுப்புக்களான காவல் துறை, சட்டம் என்று நிறைய 

இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த காப்பு தருவது 

அறிவுதான். 
                                          
                                                                     thanks to kural thiran
                                                                                     google search


No comments:

Post a Comment