முதல்பரிசுபெற்றேன் :
கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி:
" வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
எனச் சொன்னார் வள்ளுவர் ,இந்த இலக்கியத்துக்கு இலக்கணமாகத்
திகழ்ந்தவர் நம் கே.எஸ்.ஆர் .தான் கல்வியில் நான்கு படிகள் ஏறிவிட்டேன்
எம் குழந்தைகள் (மாணக்கர்கள் )பலப் படிகள் ஏற வேண்டும் என
எண்ணியவர் புதியதோர் சமுதாயம் படைக்க மாணாக்கர்களுக்கு புத்துயிர்
புகட்டுவது கே.எஸ்.ஆர். தூயஉள்ளமும் தொய்வில்லாத பணியும் இவர்தம்
கண்கள்.அந்த வகையில் கல்விப் பணிக்கு இவர் செய்ததே "வரலாற்றில்"
இடம் பெறுவதாக இருக்கும் .
இடம் பெறுவதாக இருக்கும் .
கே.எஸ்.ஆர் ஓர் அறிமுகம்:
" சுயமுயற்சி" "சுயவளர்ச்சி "என்ற கொள்கை கொண்டு விளங்கும்
சிறப்பு பெற்ற முழுமுதற் கடவுளாக விளங்கும் "உமையம்மையோடு"
"அர்த்தநாரீஸ்வரர் "(சிவபெருமான் ) காட்சியளிக்கும் திருச்செங்கோடு
வட்டத்தில் கருவேப்பம்பட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்து வாழ்ந்து
வந்தார் .
தான் படிப்பில் ஓர் மழைத்துளி அறிவு பெற்றிருந்ததால் தன் வட்டத்தில் ஓர்
சிறந்த கல்லூரி இல்லையே என்ற குறையைப் போக்குவதற்காக தான்
பிறந்த ஊரோடு ,தன் தந்தை ,தன் பெயர் ,மூன்றையும் சேர்த்து 1984 ம் ஆண்டு
கே.எஸ்.ஆர் தொழிற்க்கல்வியை முதன் முதலில் ஆரம்பித்தார் . ஒரு
கல்லூரியில் படிக்கின்ற படிப்பானது (தொழில் )வேலைவாய்ப்பு சார்ந்ததாக
இருக்க வேண்டும் என எண்ணினார் .இவ் எண்ணம் இவரின் கல்லூரிக்கு
சிறந்த பெருமையைத் தேடித் தந்தது .
இதனை
கல்வியின் பணியால் ......
உலகம் வியந்தது
கல்லூரியின் முன்னேற்றத்தைக் கண்டு ;
நாடு வியந்தது
இளைஞர்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு ;
ஆசிரியர் வியந்தது
மாணவர்களின் ஆர்வத்தைக்கண்டு ;
மக்கள் வியந்தது
கே.எஸ்.ஆர் இன் கல்விப் பணியைக் கண்டு .........
எத்தனை எத்தனை கல்லூரிகள் வந்தாலும் இனி கே.எஸ்.ஆர் போன்று ஓர்
கல்லூரி உதயமாக ! அந்த அளவிற்கு பல முன்னேற்றப் பணிகள் செய்து
இருக்கிறது .
இயலாதார்க்கு உதவுதல் :
வறுமையுற்ற மக்களுக்கு வாழ்க்கையில் அமைதி இல்லை என்பதை
உணர்ந்தவர் கே.எஸ்.ஆர் .கல்விக்கு பணம் இல்லை என்று வந்தோருக்கு
கல்வியை அள்ளிக் கொடுப்பதோடு ,பல உதவிகளையும் செய்து வருபவர்
கே.எஸ்.ஆர் அவர்கள்.அதோடு கல்விக்கு சிறந்த ஆசானாக விளங்கும்
பேராசிரியர்களுக்கு பல நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து
கொடுக்கும் உள்ளம் கொண்டவர் என்பதை விளக்கும் விதமாக
"மக்கள் பணியே மகேசன் பணி" அவர்தான் கே.எஸ்.ஆர். என்ற
வரிகளால் உணர்த்தலாம் .
வளர்ச்சிப் படிகள் :
கே.எஸ்.ஆர் கல்லூரி 300 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டதாகவும்,
வளர்ச்சியில் 20,000 மாணாக்கர்களுக்கு மேல் கல்வி எனும் அறிவைக்கற்று
வருகின்றனர்.
வருகின்றனர்.
இக் கல்லூரியில் மொத்தம் 14 கல்வி நிறுவனங்கள் ,ஆசிரியர்
பெருமக்கள் 1000 க்கு மேலும் கல்விக் கற்றுக் கொடுக்கின்றனர் .
கல்லூரிக்கு இலவசப் பேருந்து வசதிகளுடன் 106 பேருந்துகளுக்கு
மேல் செயல்பட்டு வருகின்றது .
நூலகம் :
"அறிவுடைமையே அழியாத சிறந்த செல்வம் "எனவே அனைவருக்கும்
பயன்படுவது நூலகம் எனலாம் .அந்த வகையில் 75,000 புத்தகங்களுக்கு மேல்
கொண்ட பெருமை நம் கே.எஸ்.ஆர் கல்லூரிக்கு உண்டு .
இதோடு இல்லாமல் 6,000 க்கு மேல் குறுந்தகடுகள் (CD க்களும் )
உண்டு.இப் பெரும் வசதிகள் எல்லாம் இக் கல்லூரியில் பயிலும்
மணாக்கர்களையே சாரும் .
விளையாட்டு :
"மாலை முழுதும் விளையாட்டு "என்பதன் வரிகளுக்கு ஏற்ப
விளையாட்டு பயிற்சிகள் ,நீச்சல் குளம் ,உடற்பயிற்சி (ஜிம்) ,போன்ற பயிற்சி
வசதிகள் ஏராளம் கொண்டது இக் கல்லூரிக்கு சிறப்பு.
நல்லதொரு அரசு வேலை விளையாட்டுத்துறையில்
பங்கேற்போருக்கு உண்டு என்பதை உணர்ந்த இக்கல்லுரி பல
பதக்கங்களையும் பெற்றுத்தந்துள்ளது .
விளையாட்டில் அரவம் காட்டும் இளைஞர்களைப் பற்றி
"முறுக்கேறிய
நரம்புகளை
முதலாய்க் கொண்ட
வரிகளால் உணர்த்தலாம் .
உடற்கல்வி இயக்குநருக்கு விருது :
விளையாட்டு அறிஞர் நவராஜ் செல்லய்யா அறக்கட்டளை
சார்பில் ஆண்டு தோறும் தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்த
சாதனை படைத்தவர்களுக்கு உடற்கல்வி விருது வழங்கப்படுகிறது இந்த
ஆண்டிற்கான விருது கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு
சென்னை கன்னிமார் அரங்கில் நடந்த விழாவில் உடற்கல்வி இயக்குநர் உயர்
திரு "மாதேஸ்வரன் "அவர்களுக்கு வழங்கப்பட்டது .
கல்லூரியில் ஓர் அற்புதம் "வலைப்பூ
கே.எஸ்.ஆர் கல்லூரியில் பயிலும் மாணக்கர்களின் வளர்ச்சியில்
பல வலைப்பூ வரிசைகள் உலகமெங்கும் பரவலாகி பல சிறப்புகளை
பெற்று வருகின்றன .
அவற்றில் பேராசிரியர்களின் வலைப்பூ முகவரிகள் :
http://www.gunathamizh.blogspot.in/வேர்களைத்தேடி ...
http://tamilchinna.blogspot.in/தமிழ் அருவி...
இன்னும் பல துறை வகையிலான ஆசிரியர்கள் தங்களின் தனித்
திறமைகளை வலைப்பூக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் .
மாணாக்கர் வலைப்பூ :
நல்லதொரு கல்லூரியின் வளர்ச்சிக்கு எங்கள் மாணாக்கர்களின்
வலைப்பூக்கள் உதாரணம் :
கல்லூரியின் பெருமையை விளக்கும் விதமாக இக் கல்லூரியில்
தமிழ்த்துறை விளங்குகிறது ...
அவற்றில் சிறப்புகள் சில :
விடியல்
பொன்மாலைப்பொழுது
கவியரங்கம்
கவிதை ,கட்டுரை ,பேச்சு ,போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன
என்பது இக் கல்லூரிக்கு சிறந்த பெருமையைத் தேடித் தரும் என்பதில்
ஐயமில்லை ....
முதல் பரிசு :
இந்தக் கட்டுரை எழுதியதன் மூலம் எனக்கு முதல் பரிசு கிடைத்தது அதை
விட நான் இக் கல்லூரியில் படித்தேன் என்பது எனக்குப் பெருமையாக
உள்ளது .
பெருமதிப்பிற்குரிய கே .எஸ் .ஆர் .அய்யா அவர்களின் பொன் கைகளால்
டாக்டர் .அப்துல் கலாம் அவர்களின் வாழ்கை வரலாறு .என்ற புத்தகத்தை
பரிசாகப் பெற்றேன் .
முடிவுரை :
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையிலும்
நான்முன்னேறிக்கொண்டு இருக்கிறேன் என்ற வாசகத்தை மாணாக்கர்கள்
மனதில் பெருமைப் படுத்துவது கே.எஸ்.ஆர் கல்லுரி .கடவுள் வடிவமான
அர்த்தநாரீஸ்வரர் சிறப்பைக் கொண்டு இவரைக் குறிப்பிடும் விதமாக
கவிஞர்
தன் பாடல்களில்
நான்முன்னேறிக்கொண்டு இருக்கிறேன் என்ற வாசகத்தை மாணாக்கர்கள்
மனதில் பெருமைப் படுத்துவது கே.எஸ்.ஆர் கல்லுரி .கடவுள் வடிவமான
அர்த்தநாரீஸ்வரர் சிறப்பைக் கொண்டு இவரைக் குறிப்பிடும் விதமாக
கவிஞர்
தன் பாடல்களில்
"ஒருவன் எனச் சொல்லவும்
ஒருத்தி எனச் சொல்லவும்
முடியாத உன் வரவினை
திருசெங்கோட்டிலே
உயர் மலையில் காணலாம் .."
தொடங்குக பணியை தொடங்குக அறத்தை
கடலிலும் வானிலும் கவினுறு நிலத்தினும் -பாரதிதாசன்
பாடலுக்கு ஏற்ப கல்விப்பணியைத் தொடங்கிய இவர் பணிகள் தன் வளர்க
இவர் தம் கல்விப்பணிகள் ,வாழ்க கே.எஸ்.ஆர் அவர்கள், மக்கள் உம்மைப்
பேரன்போடு வாழ்த்தட்டும் .
நன்றி
இந்தக் கட்டுரையில் பிழை இருப்பின் மன்னிக்கவும் .