Pages

Friday, October 28, 2011

உருகிய காதல்....

உருகிய காதல்....


காதலித்துப் பார்!

கவிதையின் வார்த்தை வரும் .

காதலிக்க பெண் வருவாளா...?

காதல் கஷ்டம் தான்.
 
கவிதையாக மலரும் என்றால் 

மலரட்டும் .

என் எதிர்காலமே கனவு 
என் காதல் சேரும் போது.

எதிர் கால வாழ்க்கையும் 

சேறாகும்.
இடையில் நின்றுப் பார்ப்பாள்

பார்த்தால் இடையே தெரியாது 

மகிழ்ச்சியாக பேசுவாள் -மறு 

பிறவியில் சேர்ந்து வாழலாமென்று .


சாந்தமாக பேசுவாள் 



சந்தன மணம் வீசமட்டாள்

மொட்டாய் இருப்பாள்

பூவாய் மலரமட்டாள்.

காயாய் இருப்பாள் 

கனியாக மாட்டாள் 

கன்னியாக இருப்பாள் 

காதலிக்க மாட்டாள் ..

அழகாய் இருப்பாள் 
 ஆசைப்பட மாட்டாள் .

காதலித்துப்   பார்  !
கஷ்டம் வரும் ..

பி 

ன்

பு 

தா 

ன் 

கவிதையின்  வார்த்தை வரும் .....


இந்தக் கவிதையின்  மூலம் ஒன்றை 

உணர வேண்டும் ..



காதல் உண்மை தான் ஆனால்

காதலி பொய் .   என்பது புரிகிறது .

நான் சொல்வது ..

 

காதலிப்பது தவறில்லை 

காதலித்த பெண்ணை கை விடுவது தான்  தவறு ..



                                                                                                நன்றி.




































































Tuesday, October 18, 2011

பார்க்க..... ரசிக்க ....

பார்க்க..... ரசிக்க ....















































































bye bye bye   ................................................



Tuesday, October 4, 2011

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் .............

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை  வாழ்த்துக்கள்   .............




கல்வி தரும் கலைமகள்

 
கல்வி தரும் கலைமகள்
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் " ---- மகாகவி பாரதியார்

                                                                                                                                                                          அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்பா.


நாளை 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள்

வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி பூஜை ஒரு ஜாலி தான்.

அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்

.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை

அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.

அய் ஜாலி தான்



குறிப்பாக ...

கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகக் இன் நன்னாளில் புத்தகங்களை வைத்து வணங்கி  அன்றைய தினம் ஒரு பத்து வரிகளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்


  எல்லா வளமும் பெற்று கல்வியால் வளர்ச்சி பெற்று இறைவனது

அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...


மறுபடியும் வாழ்த்துக்கள்

Thursday, April 21, 2011

10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு


10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு

 




















சென்னை : சமச்சீர் கல்விக்கான 10ம் வகுப்பு 

பாடப்புத்தகம் இன்று

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு ஆங்கில மற்றும் தமிழ்

வழி பாட புத்தகங்கள் 

வெளியிடப்பட்டுள்ளது. www.pallikalvi.in என்ற 

இணையதளத்தில் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை 

காணலாம். இத்தகவலை 

தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


நல்ல மதிப்பெண்கள் பெற அன்பு மாணவர்களுக்கு 

வாழ்த்துக்கள் .... 

Wednesday, April 20, 2011

கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள்



கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ?
                                                                      
                                                                   பதில்-ரத்தவகை

2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ?

                                                                    பதில்-சபீனா

3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ?



                                                                    பதில்-தெலுங்கு மொழி

4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?

                                                               பதில்-  ஜீலை 20                                                                                                                



5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ?

                                 பதில்-அஸ்ஸாம் மாநிலத்தில்


6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ?  

                                                     பதில்-கங்கை டெல்டா பகுதி

7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ?

                                                                   பதில்-.சில்கா ஏரி

8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ?
 
                                                                பதில்-தங்க இழை

9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும்
  மாநிலம் எது ?
                                                               பதில்-உத்திரப்பிரதேசம்,

10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ?

                                         பதில்- மூன்று.
                                                              










Wednesday, March 30, 2011

சிறுகதைப் பரிசு ..

  0/0 

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி 

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.2011
வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-9
 
*போட்டிக்கான நெறிமுறைகள்:

1. 5 பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின்
பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ
முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.கதையின் இரு படிகளைக் கட்டாயம் அனுப்புக.
5.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர்
களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
6.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
7.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
8.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை
ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
9.இப்போட்டி 12 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.கதைகள்
வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாக வெளியிடப்படும்.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை
இயக்கத் தலைவர்க்கு உரியதாகும். முழுமையான நெறிமுறைகள்
1.7.2011 வெல்லும் தூயதமிழில் முடிவுகள் வெளிவரும்.
 
பரிசுகள் விபரம் :
 
. முதற்பரிசு உருவா 1000.00
இரண்டாம் பரிசு உருவா 500.00
மூன்றாம் பரிசு உருவா 250.௦௦
 
பரிசுகளை வழங்குபவர் எழுத்தாளர் 
 
எழுத்தாளர் இரா.தேவதாசு, புதுச்சேரி.
-முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,தனித்தமிழ் இயக்கம்.

தொடர்பு எண்கள் : 
0413-2247072, 97916 29979ல் வெளியிடவும்

Saturday, March 12, 2011

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........




                 தமிழ் மொழியில் மொத்தம் 246  எழுத்துக்களில் 42  எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு .
   
        அவற்றில் சில  :


             VAO போன்றத் தேர்வுகளில்  இவை கேட்கப்படலாம் :

      
        ஆ -   பசு 

        ஈ -    பறக்கும்பூச்சி

        ஊ -உணவு 

        ஏ-அம்பு 

       ஐ -அழகு ,தலைவன் 

        ஓ-மகிழ்ச்சி 

  மேலும் 
  ம- வின் மா , மீ , மு , மே,மை ,மோ.. பற்றியது

         மா -அழகு ,மேன்மை 
      மீ -மேலே ,உயர்வு 

      மூ -மூப்பு (முதுமை ),மூன்று 

      மே-அன்பு ,மேம்பாடு 

      மை -அஞ்சனம் (கண்மை ),எழுதுமை 

       மோ-முகர்தல்  

       
  த- வின்  இனம் தா,தீ ,தூ,தே,தை  பற்றியது

         தா -கொடு ,அழிவு, தாண்டு

         தீ -நெருப்பு 
     
         தூ -தூய்மை ,பகை 

         தே -கடவுள் 

          தை -தமிழ் மாதம்


ப  -வின் இனம்  பா ,பூ,பே ,பை ,போ, பற்றியது

          பா -அழகு ,பாட்டு

        பூ-மலர் ,புவி 
       பே -நுரை ,அக்கம் 

       பை -கொள்கலம் ,இளமை 

       போ-செல் 

ந -வின் இனம் நா ,நீ ,நே ,நை ,நோ, பற்றியது

      நா -நாக்கு ,அயலார் 

     நீ -நீ (முன்னிலை )

      நை -வருந்து 

     நோ -நோய் ,துன்பம் 

    

க -வின் இனம் கா,கூ, கை,கோ பற்றியது

      கா -சோலை 

      கூ-பூமி 

      கை -உறுப்பு 
     கோ -வேந்தன் 

வ -வின் இனம் வா ,வீ ,வை ,வௌ பற்றியது

      வா -வருகை

      வீ -மலர் ,விரும்புதல் 
      வை -வைத்தல் ,வைதல்

       வௌ -வவ்வுதல் ,

ச -வின் இனம்  சா ,சீ,சே ,சோ பற்றியது 

        சா -சாதல் ,சோர்தல் 

        சீ -வெருப்புச்சொல்  ,சீத்தல் 

        சே-காளைமாடு ,சிவப்பு 

       சோ -மதில் ,நகல் 


என்பனப் போன்று   பல  வகை உண்டு  தெரிந்து  பயன் பெறுங்கள்  ...........

                                                                                       
                                                                                                     நன்றி